வெறும் 4 லட்சம்தானா! இனி டாக்ஸிக்கு பதில் 33 கிமீ மைலேஜ் தரும் இந்த காரை சொந்தமா வாங்கி வீட்ல நிறுத்திக்கலாம்!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.27 லட்ச ரூபாய் மட்டுமே.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 6.12 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் விலை குறைவானது என்பதுடன், அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாகவும் உள்ளது.

Maruti Suzuki S-Presso Side View

இந்த காரின் Std (O) மற்றும் LXi (O) ஆகிய பெட்ரோல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.12 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. அதே நேரத்தில் VXi (O) மற்றும் VXi+ (O) ஆகிய பெட்ரோல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.76 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன.

மறுபக்கம் VXi (O) AGS மற்றும் VXi+ (O) AGS ஆகிய பெட்ரோல் வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 25.30 கிலோ மீட்டர் ஆகும். இவையே சிறப்பான மைலேஜ்தான். ஆனால் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் LXI (O) மற்றும் VXI (O) ஆகிய சிஎன்ஜி வேரியண்ட்கள் இதை விட அதிக மைலேஜ் வழங்க கூடியவை ஆகும்.

Maruti Suzuki S-Presso

மேற்கண்ட சிஎன்ஜி வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டராக இருக்கிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். அத்துடன் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் (Safety Features) வழங்கப்படுகின்றன.

பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், ஏர்பேக்குகள், அட்வான்ஸ்டு ஹில் ஹோல்டு அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ரியர் பார்க்கிங் அஸிஸ்ட் சென்சார் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. இது 5 பேர் பயணம் செய்ய கூடிய ஒரு கார் ஆகும்.

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் நீளம் 3,565 மிமீ ஆகவும், அகலம் 1,520 மிமீ ஆகவும், உயரம் 1,553 மிமீ ஆகவும் உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2,380 மிமீ ஆக இருக்கிறது. விலை குறைவு, மைலேஜ் அதிகம் என்ற போதிலும், நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது நமக்கு தெரிய வந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், வெறும் 1,806 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 2,227 ஆக இருந்தது.

இது 19 சதவீத வீழ்ச்சி ஆகும். ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டால், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை உயர்ந்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 726 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அதன் பின் வந்த மே மாதம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 1,806 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனையாகியுள்ளன. இது 59.80 சதவீத வளர்ச்சி ஆகும். எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனையில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி, கண்டிப்பாக மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் (Renault Kwid) மற்றும் டாடா டியாகோ (Tata Tiago) போன்ற கார்களுக்கு எல்லாம் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது. அத்துடன் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) காருக்கும் கூட, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்தான்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 12, 2025, 19:13 [IST]
English summary
Maruti suzuki s presso sales report may 2025 60 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+