33 கிமீ மைலேஜ்! விலை வெறும் 3.50 லட்சம்தான்! ஆனா சும்மா குடுத்தா கூட யாரும் வாங்க மாட்டாங்கலாட்ட இருக்கு!

இந்தியாவில் முன்பு ஒரு காலம் இருந்தது. புதிய கார் வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள் இரண்டே இரண்டு விஷயங்களுக்கு மட்டும்தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அது விலை மற்றும் மைலேஜ் ஆகியவை ஆகும். வேறு எந்தவொரு விஷயமும் புதிய கார் விற்பனையில் பெரிதாக எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

ஆனால் தற்போது காலம் வெகுவாக மாறி விட்டது. விலை மற்றும் மைலேஜ் ஆகிய 2 விஷயங்களை கடந்து, பாதுகாப்பு, வசதிகள் மற்றும் டிசைன் என ஏராளமான அம்சங்களை வாடிக்கையாளர்கள் கவனிக்கின்றனர். இதன் காரணமாக விலை குறைவான மற்றும் அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களின் விற்பனை முன்பு போல் இல்லை. இந்த ரக கார்களின் விற்பனை மிகவும் மந்தமாகி விட்டது.

Maruti Suzuki S-Presso Side View

இதற்கு மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso) மிகச்சிறந்த உதாரணம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 3.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 5.25 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். அதே நேரத்தில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் 24.12 கிலோ மீட்டர் முதல் 32.73 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது.

Maruti Suzuki S-Presso

இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். வேரியண்ட்களை பொறுத்து, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் மைலேஜ் மாறுபடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆனால் அளவில் மிகவும் சிறியது, பெரிய அளவில் அதிநவீன வசதிகள் இல்லை என்பது போன்ற காரணங்களால், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது.

குறிப்பாக மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் பாதுகாப்பு இல்லாதது என இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் கருதுகின்றனர். மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார், குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் சோபிக்க தவறியதால்தான், வாடிக்கையாளர்கள் மத்தியில் இத்தகைய அவநம்பிக்கை ஏற்பட்டது.

இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. ரஸ்லேன் தளத்தில், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், வெறும் 1,747 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், 2,283 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 536 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 23.48 சதவீத வீழ்ச்சி ஆகும். வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும் கூட, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ விற்பனையில் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 2,857 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அதன் பின் வந்த நவம்பர் மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 1,747 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் பார்த்தால், 1,110 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 38.85 சதவீத வீழ்ச்சி ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லாவிட்டாலும் கூட, டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் ரெனால்ட் க்விட் (Renault Kwid) போன்ற ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, December 14, 2025, 15:00 [IST]
English summary
Maruti suzuki s presso sales report november 2025 38 85 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+