33 கிமீ மைலேஜ்! 3.50 லட்சத்துக்கு புது கார் கிடைக்கறப்ப ஏன் பைக்ல போணும்? கண்ணாபின்னானு வித்துட்டு இருக்கு!
இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso) உள்ளது. இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (October 2025 Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 2,857 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம், 2,139 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது 718 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 34 சதவீத வளர்ச்சி ஆகும். வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும் கூட, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் விற்பனையில் வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது.
அதாவது வி3 கார்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 1,774 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த அக்டோபர் மாதம், இந்த எண்ணிக்கை, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 2,857 ஆக உயர்ந்துள்ளது.

அதாவது 1,083 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 37.91 சதவீத வளர்ச்சி ஆகும். மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் இந்த வளர்ச்சிக்கு 2 முக்கியமான காரணங்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது. இதில், ஒன்று ஜிஎஸ்டி (GST) வரி குறைப்பு ஆகும்.
மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ ஏற்கனவே விலை குறைவானதுதான். ஆனால் ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக, அதன் விலை மேலும் குறைந்துள்ளது. இந்த காரின் விற்பனையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு மற்றொரு காரணம், இந்தியாவில் சமீபத்தில் முடிவடைந்த பண்டிகை காலமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 3.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 5.25 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
மிகவும் விலை குறைவானது என்பதுடன், இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்குவதாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அளவில் கச்சிதமாக இருக்க கூடிய, அதே நேரத்தில் விசாலமான கேபின் மற்றும் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ நல்ல ஆப்ஷன்.
லக்கேஜ்களை வைத்து கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள இதன் 239 லிட்டர் பூட் ஸ்பேஸ் சிறிய குடும்ப பயணங்களுக்கு ஏற்றது. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், இபிடி உடன் ஏபிஎஸ், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் போன்ற வசதிகள் எல்லாம் ஒருங்கிணைந்து, உங்கள் பயணத்தை சௌகரியமானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago) போன்ற ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன். அத்துடன் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) காருக்கு பதிலாகவும், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








