க்ராஷ் டெஸ்ட் ரேட்டிங் வந்ததும் எல்லாமே தலைகீழா மாறி போச்சு... பரிதாப நிலையில் மாருதியின் விலை குறைவான கார்!

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த கார்கள் அதிக மைலேஜ் வழங்கி விட்டால், விற்பனை இன்னும் சிறப்பாக இருக்கும். ஆனால் குறைவான விலை மற்றும் நிறைவான மைலேஜ் என்ற வாடிக்கையாளர்களின் 2 முக்கியமான எதிர்பார்ப்புகளையும் ஒரு சேர பூர்த்தி செய்தாலும் கூட, ஒரு சில கார்கள் மட்டும் விற்பனையில் சோபிக்க தவறுகின்றன.

இதற்கு மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso) ஒரு உதாரணம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஆரம்ப விலை வெறும் 3.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 5.25 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

Maruti Suzuki S-Presso Side View

இவை அனைத்தும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இது மிகவும் விலை குறைவானது என்பதுடன், அதிக மைலேஜ் வழங்க கூடியதாகவும் இருக்கிறது. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன.

இருந்தும் கூட, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ ஒவ்வொரு மாதமும் மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விற்பனையாகி வருகிறது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

Maruti S-Presso Interior

இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 1,774 எஸ்-பிரெஸ்ஸோ கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஒரு மாருதி சுஸுகி நிறுவனத்தின் காருக்கு இது மிகவும் குறைவான விற்பனை எண்ணிக்கைதான். ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் விற்பனையில் சிறிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்பதுதான்.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1,708 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 66 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 4 சதவீத வளர்ச்சி ஆகும்.

இதன் மூலமாக நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் (Top 10 Hatchbacks September 2025), மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார், 10வது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 9 இடங்களில் முறையே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், மாருதி சுஸுகி வேகன் ஆர், மாருதி சுஸுகி பலேனோ, டாடா டியாகோ, மாருதி சுஸுகி ஆல்டோ கே10, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ், டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் ஐ20 மற்றும் டொயோட்டா க்ளான்சா ஆகிய கார்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் கடந்த 2019ம் ஆண்டுதான் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை சிறப்பாகவே இருந்தது. அறிமுகம் செய்யப்பட்ட முதல் வருடத்திலேயே 75 ஆயிரத்திற்கும் அதிகமான மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டன.

ஆனால் மோதல் சோதனைகளில் சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங் பெற தவறியதால், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை சரிவடைய தொடங்கியது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ போன்ற சிறிய கார்களுக்கு பதிலாக, அதிநவீன வசதிகள் நிரம்பிய பெரிய கார்களின் மீது வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பியது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை எண்ணிக்கையை குறைத்து விட்டன.

இருப்பினும் மிகவும் குறைவான விலையில், அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு புத்தம் புதிய ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய இந்திய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Sunday, October 19, 2025, 21:44 [IST]
English summary
Maruti suzuki s presso sales report september 2025 4 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+