32 கிமீ மைலேஜ் தரும் 7 சீட்டர் கார அடி மாட்டு விலையில் களமிறக்க போகுதா மாருதி! மார்க்கெட்ட புரட்டி போட போறாங்க

நடப்பு 2025ம் ஆண்டின் 5வது மாதத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம். மே மாதம் பிறந்துள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்திற்கான கார் நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports) தற்போது வரிசையாக வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக திகழும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டும் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி நிறுவனம், நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒட்டுமொத்தமாக 1,79,791 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

இதில், இந்தியாவின் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 1,42,053 ஆகும். இதில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் இலகு ரக வர்த்தக வாகனமான (Light Commercial Vehicle - LCV) சூப்பர் கேரியின் (Super Carry) விற்பனை எண்ணிக்கையும் அடங்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Maruti Suzuki Ertiga Airbags

அதே நேரத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் இருந்து சர்வதேச சந்தைகளுக்கு 27,911 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. அத்துடன் டொயோட்டா (Toyota) நிறுவனத்திற்கு 9,827 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது. டொயோட்டா நிறுவனம் சுஸுகி உடன் கடந்த சில வருடங்களாக கூட்டணியில் இருந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதன் மூலம், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து கொண்டுள்ளது. டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

Maruti Suzuki Ertiga

முறையே மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) ஆகிய கார்கள்தான், இந்திய சந்தையில் டொயோட்டா க்ளான்சா மற்றும் டொயோட்டா ரூமியான் என்ற பெயர்களில் ரீ-பேட்ஜ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஆக மொத்தத்தில் உள்நாட்டு விற்பனை, ஏற்றுமதி மற்றும் டொயோட்டாவிற்கான சப்ளை என நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,79,791 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 1,68,089 கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இது 6.96 சதவீத வளர்ச்சி ஆகும். மாருதி சுஸுகி நிறுவனம் தற்போதைய நிலையில் ஹேட்ச்பேக் ரகத்தில், ஆல்டோ கே10, எஸ்-பிரெஸ்ஸோ, செலிரியோ, வேகன் ஆர் மற்றும் ஸ்விஃப்ட் ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. அதே சமயம் செடான் ரகத்தில் டிசையர் காரையும், எஸ்யூவி ரகத்தில் பிரெஸ்ஸா காரையும், எம்பிவி ரகத்தில் எர்டிகா காரையும், வேன் ரகத்தில் ஈகோ காரையும் விற்பனை செய்து கொண்டுள்ளது.

இவை அனைத்தும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அரேனோ ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படும் கார்கள் ஆகும். மறுபக்கம் நெக்ஸா பிரீமியம் ஷோரூம்கள் மூலமாக இன்விக்டோ, எக்ஸ்எல்6, ஜிம்னி, க்ராண்ட் விட்டாரா, ஃப்ரான்க்ஸ், சியாஸ், இக்னிஸ் மற்றும் பலேனோ ஆகிய கார்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இதில், இன்விக்டோ மற்றும் எக்ஸ்எல்6 ஆகியவை எம்பிவி ரகத்தை சேர்ந்தவை. மறுபக்கம் ஜிம்னி, க்ராண்ட் விட்டாரா மற்றும் ஃப்ரான்க்ஸ் ஆகியவை எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவை. அதே நேரத்தில் சியாஸ் காரானது செடான் ரகத்தை சேர்ந்ததாகவும், இக்னிஸ் மற்றும் பலேனோ ஆகியவை ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தவையாகவும் உள்ளன.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா லைன்-அப்பில் கூடிய விரைவில் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படும் சியாஸ் காரின் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதே நேரத்தில் இ-விட்டாரா இந்த லைன்-அப்பில் இணையவுள்ளது. இதுதான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் இ-விட்டாரா மட்டுமல்லாது, வரும் காலங்களில், புதிய 7 சீட்டர் எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக கார்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், 7 சீட்டர் எம்பிவி கார், 32 கிமீ மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கலாம் எனவும், இதன் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக இந்த புதிய கார் மீது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிற. இதன் காரணமாக வரும் காலங்களிலும் மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, May 1, 2025, 23:07 [IST]
English summary
Maruti suzuki sales report april 2025 7 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+