மாருதியை அடிக்கலாம் ஒருத்தன் புதுசா பொறந்துதான் வரணும்... பெரிய சம்பவத்தை அசால்டா பண்ணி வெச்சிருக்காங்க...
இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக உள்ள மாருதி சுஸுகியின் (Maruti Suzuki), நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒட்டுமொத்தமாக 2,12,251 வாகனங்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதுதான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை (Highest-Ever Monthly Sales) ஆகும். அதாவது இதற்கு முன்பாக எந்தவொரு மாதத்திலும் மாருதி சுஸுகி நிறுவனம் இவ்வளவு அதிகமான கார்களை விற்பனை செய்தது கிடையாது.
எனவே இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு சாதனை என்பதுடன், இது மிகவும் சிறப்பான வளர்ச்சி என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஏனெனில் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் ஒட்டுமொத்தமாக வெறும் 1,99,364 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 12,887 கார்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் தற்போதைய நிலையில் ஹேட்ச்பேக் ரகத்தில் ஆல்டோ கே10, எஸ்-பிரெஸ்ஸோ, செலிரியோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் இக்னிஸ் ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது.
அதே நேரத்தில் செடான் ரகத்தில் டிசையர் மற்றும் சியாஸ் ஆகிய கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. மறுபக்கம் எஸ்யூவி ரகத்தில் பிரெஸ்ஸா, ஃப்ரான்க்ஸ், க்ராண்ட் விட்டாரா, ஜிம்னி மற்றும் இன்விக்டோ ஆகிய கார்களையும், எம்பிவி ரகத்தில் எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய கார்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இதுதவிர வேன்கள் பிரிவில் ஈக்கோவையும், வர்த்தக வாகனங்கள் பிரிவில் சூப்பர் கேரி வாகனத்தையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. இதில் பெரும்பாலான கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இதன் காரணமாகவே மாருதி சுஸுகி நிறுவனத்தால் விற்பனையில் சாதனைகளை படைக்க முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக உள்ளன. அத்துடன் அவை நல்ல மைலேஜ் வழங்க கூடியவையாகவும் இருக்கின்றன. மேலும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் வாடிக்கையாளர்களுக்கு அவசியமான வசதிகளுக்கும் பஞ்சமில்லை.
மேலும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை பராமரிப்பும் கூட எளிமையானது. அத்துடன் இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு சேல்ஸ் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் உள்ளன. இந்த பிரம்மாண்டமான நெட்வொர்க், மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை வாங்குவது மற்றும் சர்வீஸ் செய்வது எளிமையாக்குகிறது.
இது போன்ற காரணங்களால்தான், மாருதி சுஸுகி நிறுவனத்தால், ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்ய முடிகிறது. இது நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. எனவே 2025ம் ஆண்டை மாருதி சுஸுகி நிறுவனம் மிகவும் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது என கூறலாம்.


Click it and Unblock the Notifications








