2 மாசமா முக்கி முக்கி வித்தும் இந்த மாருதி காரை ஒருத்தர் கூட வாங்கல! வெளியே வந்த தகவலால் கடும் அதிர்ச்சி!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த கார்களில் ஒன்று மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz). பிரீமியம் செடான் (Premium Sedan) ரகத்தை சேர்ந்த சியாஸ் கார், மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரீமியம் நெக்ஸா டீலர்ஷிப்கள் (Nexa Dealerships) மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna), ஹோண்டா சிட்டி (Honda City), ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) போன்ற செடான் கார்களுக்கு எல்லாம் போட்டி மாடல் ஆகும். கடந்த 2014ம் ஆண்டுதான் மாருதி சுஸுகி சியாஸ் கார் இந்திய சந்தையில் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

Maruti Suzuki Ciaz Side Design

அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்ப கால கட்டத்தில் மாருதி சுஸுகி சியாஸ் காரின் விற்பனை மிகவும் சிறப்பாகவே இருந்தது. ஆனால் செடான் ரக கார்களுக்கு பதிலாக எஸ்யூவி ரக கார்களை வாடிக்கையாளர்கள் விரும்ப தொடங்கியது மற்றும் பல்வேறு போட்டி மாடல்களின் வருகை போன்ற காரணங்களால், மாருதி சுஸுகி சியாஸ் காரின் விற்பனை நாளுக்கு நாள் சரிவடைய தொடங்கியது.

மாருதி சுஸுகி நிறுவனம் சியாஸ் காரை சீரான இடைவெளிகளில் அப்டேட் செய்ய தவறியதும் அதன் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக மாறியது. இந்த சூழலில் கடந்த 2 மாதங்களாக இந்திய சந்தையில் ஒரு மாருதி சுஸுகி சியாஸ் கார் கூட விற்பனையாகவில்லை என்ற தகவல் தற்போது நமக்கு தெரிய வந்துள்ளது.

Maruti Suzuki Ciaz

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 597 சியாஸ் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு மாருதி சுஸுகி சியாஸ் கார் கூட விற்பனை செய்யப்படவில்லை. அதேபோல் இதற்கு முந்தைய அக்டோபர் மாதமும், அதாவது நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதமும், ஒரு மாருதி சுஸுகி சியாஸ் கார் கூட விற்பனை செய்யப்படவில்லை.

ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது. மாருதி சுஸுகி சியாஸ் கார், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே விற்பனையில் இருந்து விலக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாருதி சுஸுகி சியாஸ் கார் இன்னமும் பட்டியலிடப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி சியாஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 9.09 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 11.89 லட்ச ரூபாய் என மாருதி சுஸுகி நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: செடான் ரகத்தை சேர்ந்த சியாஸ் விற்பனையில் சோபிக்க தவறியிருந்தாலும் கூட, மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்றொரு செடான் ரக காரான டிசையர் (Maruti Suzuki Dzire), ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது என்பது மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு ஆறுதல் அளிக்க கூடிய விஷயமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 12, 2025, 19:06 [IST]
English summary
Maruti suzuki sells zero units of ciaz in november 2025 check all details here
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+