8 நாளில் 1.65 லட்சம் பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க! வெளிநாட்டிற்கு வரலாறு காணாத ஏற்றுமதி வேற!

மாருதி நிறவனம் கடந்த செப்டம்பர் மாத வற்பனைவிபரங்களை வெளியிட்டள்ளது. இந்நிறுவனம் கடந்த செப்டம் பர் மாதம் மட்டும் மொத்தம் 1,85,665 கார்களை விற்பவனை செய்துள்ளது. இதில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி எண்ணிக்கை மற்றும் வளர்ச்சி குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதிசுஸூகி நிறுவனம் கடந்த செப்டரம் பமாத வற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த செப் மாத விற்பனவையில் கடந்தாண்டு செப்டம்பர் மாத விற்பனையை விட 3 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. அதே நேர் கடந்தசெப்டம்பல் மாதம் வரலலாறு காணாத அளவிற்கு ஏற்றுமதியை செய்துள்ளது.

Maruti Suzuki Sep 2025 Sales

இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் மொத்தம் 1,89,655 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டில் மட்டும் 1,35,711 கார்கள் விற்பனையாகியுள்ளன. 42,204 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளது. இதுவரை மாருதி வரலாற்றில் இவ்வளவு ஏற்றுமதியை செய்ததில்லை. வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிக வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இந்நிறுவனம் கடந்தாண்டு செப்டமபர் மாதம் மொத்தம் 1,84,727 கார்களை விற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிடும் போது 5000 கார்கள் கூடுதலாக விற்பனையாகியள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் நவராத்திரி ஆகிய காரணங்களால் விற்பனை வேகமாக அதிகரித்தததாக தெரிவித்துள்ளது. நவராத்திரி முதல் நாளில் ஜிஎஸ்டி குறைந்த நிலையில் 8 நாளில் மட்டும் 1.65 லட்சம் பேருக்கு இந்நிறுவனம் காரை டெலிவரி செய்ததாக தெரிவித்துள்ளது.

Maruti Suzuki Sep 2025 Sales

இந்நிறுவனம் மினி செக்மெண்டில் ஆல்டோ மற்றும் எக்ஸ்பிரஎஸ்ஸோ ஆகிய கார்களை விற்பவனை செய்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 7205 கார்களை இந்த செக்மெண்டில் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 10,363 கார்களை விற்பனை செய்திருந்தது. காம்பேக்ட் செக்மெண்டில் பலேனோ, செலிரியா, டிசையர், இக்னீஷ், ஸ்விஃப்ட், வேகன் ஆர் ஆகிய கார்களை விற்பனவை செய்த வருகிறது. இந்த செக்மெண்டில் கடந்த செப்டம்பர் மாதம் 66,882 கார்களை விற்பனை செய்துள்ளது இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 60,480 கார்களை விற்பவனை செய்திருந்தது.

மிட் சைஸ் செடான் செக்மெண்டில் இந்நிறுவனம் சியாஸ் காரை இன்னும் பட்டியலில் வைத்துள்ளது. ஆனால் ஒரு காரை கூட விற்பனை செய்யலவில்லை. யூட்டிலிட்டி வாகன செக்மெண்டில் பிரெஸ்ஸா, எர்டிகா, ஃபிராங்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, விக்டோரிஸ், எக்ஸ்எல்6 ஆகிய கார்கள் விற்பனவையாகி வருகிறது. இந்த செக்மெண்டில் கடந்த செப்டம்பர் மாதம் 48,695 வாகனங்களை விற்பவனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 61,549 கார்களை விற்பனை செய்திருந்தது.

Maruti Suzuki Sep 2025 Sales

வேன் செக்மண்டில் இந்நிறுவனம் ஈக்கோ காரை மட்டுமே விற்பனை செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 10,035 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 11,908 கார்களை விற்பனை செய்திருந்தது. இலகு ரக கமர்ஷியல் வாகனங்களில் இந்நிறுவனம் சூப்பர் கேரி என்ற வாகனத்தை தான் விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம்2891 வாகனங்களை கடந்த செப்டம் மாதம் விற்பனை செய்துள்ளது .3099 வாகனங்களை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் விற்பனை செய்திருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் தான் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயாரிக்கம் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் ஏற்றுமதியில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது மிகப்பெரிய சாதனை தான். தொடர்ந்து இந்த வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 2, 2025, 9:19 [IST]
English summary
Maruti suzuki sep 2025 sales exports offset domestic decline
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X