கம்மி சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக மைலேஜ் தரும் கார்! மாருதியின் மாஸ்டர் பிளான் இதான்!
இந்தியாவின் மோட்டார் வாகன சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் மாருதி சுஸுகி, பல்வேறு பிரிவுகளில் 50% க்கும் அதிகமான மார்கெட்ப் பங்கை வகித்து வந்தது. இருப்பினும், அதிகரித்து வரும் போட்டி மற்றும் பரிணமிக்கும் தொழில் டிரெண்டுகளின் காரணமாக, குறிப்பாக சிறிய கார் துறையில் அவற்றின் ஆதிக்கம் குறைந்து வருகிறது. புதிய வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட புதுமையான மாடல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், தனது கோட்டையை மீண்டும் கைப்பற்றும் வகையில் அந்நிறுவனம் தற்போது யுத்தி வகுத்து வருகிறது.
சுஸுகியின் இடைக்கால மேலாண்மைத் திட்டத்தின்படி, இந்தியாவிற்காக குறிப்பாக ஒரு புதிய சிறிய காரை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த வாகனம் வருடத்திற்கு சுமார் ரூ. 5 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களை ஈர்க்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது. இந்த பிரிவில் வாடிக்கையாளர் விருப்பங்களுடன் இணைகின்ற என்ட்ரி லெவல் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதை இத்திட்டம் வலியுறுத்துகிறது.

வரும் சிறிய காரில் மைல்டு-ஹைப்ரிட் இன்ஜின்கள் அல்லது ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் ஆப்ஷன்கள் போன்ற மேம்பட்ட பவர் டிரெய்ன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ட்ரி லெவல் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த தொழிற்நுட்பங்களை விரைவாக உருவாக்குவதில் சுஸுகியின் யுத்தி உள்ளது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த முயற்சி மாரூதி சுஸுகியின் யுகிக்கப்பட்ட குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகன திட்டத்திலிருந்து வேறுபடுகிறது.
இந்த புதிய மாடல் எம்-எச்இவி (மைல்டு ஹைப்ரிட் என்ஜின்), சிஎன்ஜி மற்றும் எஃப்எஃப்வி (ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் வாகனம்) பவர் டிரெய்ன்களை வழங்கும். ஆப்ஷன்களில் இந்த பன்முகத்தன்மை, அதிக அளவிலான நுகர்வோர் விருப்பங்களையும் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடுகளையும் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

என்ட்ரி லெவல்மற்றும் சிறிய ஹேட்ச்பேக்குகள் உள்ளிட்ட ஏ பிரிவில் மாருதி சுஸுகி விற்பனையில் வீழ்ச்சியைக் காண்கிறது. அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் எஸ்யூவிக்கள் பக்கம் நகரும் நுகர்வோர் ஆர்வம் போன்ற காரணங்களால் இந்த டிரெண்டிற்கு பங்களிக்கின்றன. இந்த சவால்களுக்கு மத்தியிலும், பைக்குளகளிலில் இருந்து பல வாடிக்கையாளர்கள் மாறுவதால் குறிப்பிடத்தக்க சாத்தியம் உள்ளது.
அல்டோ கே10 தற்போது மாருதியின் மிகவும் குறைந்த விலை வாகனம், 4.09 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. 4.27 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள எஸ்-ப்ரெஸ்ஸோ மற்றொரு ஆப்ஷனாகு. ரெனோவின் ஃக்விட் இந்த விலை பிரிவில் போட்டியிடுகிறது. 5 லட்சம் ரூபாய்க்கு (எக்ஸ்-ஷோரூம்) கீழ் இதன் விலை தொடங்குகிறது.

பிஎஸ்6 எமிஷன் விதிமுறைகளை செயல்படுத்துவதும் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கமும் இந்த வகை வாடிக்கையாளர்களுக்கு வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், மாருதி சுஸுகி போட்டி விலைப் புள்ளியில் ஈர்க்கக்கூடியதாக வாகனத்தை உருவாக்கி வழங்குவதற்கான வாய்ப்பைக் கொடுக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியின் யுத்திசார்ந்த அணுகுமுறை, பட்ஜெட் மனப்பான்மை கொண்ட நுகர்வோர்களின் பரிணமிக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு விரும்பத்தக்க மற்றும் குறைந்த விலை வாகனத்தை உருவாக்க முயற்சி செய்து வரகுிறது. மலிவு மற்றும் புதுமை மீது கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியாவின் போட்டி மோட்டார் வாகன சந்தையில் தங்கள் மார்கெட் பங்கை மீண்டும் கைப்பற்றும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









