மாருதியோட கணக்கு தப்புமா... அறிமுகம் செய்த 2 வாரங்களில் 25 ஆயிரம் புக் செய்த காரின் சேல்ஸ் ரிப்போர்ட்!

மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) என்கிற நடுத்தர அளவிலான எஸ்யூவி (Mid-size SUV) கார், அறிமுகமான குறுகிய காலத்திலேயே, சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. செப்டம்பர் மாத மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார், 25 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 13 ஆயிரத்து 496 விக்டோரிஸ் கார்கள் விற்பனையாகி, மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் அதிக விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

ஆனால், இதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில் 4 ஆயிரத்து 261 விக்டோரிஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஏனெனில், செப்டம்பர் மாத மத்தியில் இருந்துதான் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட விக்டோரிஸ் கார்கள் புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்ய துவங்கப்பட்டன. விக்டோரிஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா (Grand Vitara) ஆகிய இரு விலையுயர்ந்த மாருதி கார்களின் மொத்த விற்பனை எண்ணிக்கை 23 ஆயிரத்து 900 யூனிட்களைத் தாண்டியுள்ளது.

maruti suzuki victoris suv cars sales

மாருதி சுஸுகியின் பிரீமியம் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்யப்படும் கிராண்ட் விட்டாராவை விட விக்டோரிஸ் கார்கள் 3 ஆயிரத்து 400 யூனிட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. விக்டோரிஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய இரண்டு கார்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான நிலையில் உள்ளன. ஆனால், விக்டோரிஸ் விலை குறைவான மாருதி கார்கள் விற்பனை செய்யப்படும் அரேனா ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்டோரிஸ் கார் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.49 லட்சம் ஆகும். ஆறு வெவ்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை உள்ளன. கடந்த நவராத்திரி முதல் வாடிக்கையாளர்களுக்கு விக்டோரிஸ் கார்கள் டெலிவிரி செய்யப்பட துவங்கப்பட்டன.

maruti suzuki victoris suv cars sales

இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக, பாரத் NCAP மற்றும் குளோபல் NCAP மோதல் சோதனைகள் இரண்டிலும் முழு ஐந்து நட்சத்திர மதிப்பீட்டை விக்டோரிஸ் பெற்றுள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் K-சீரிஸ் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 103.06 பிஎஸ் ஆற்றலையும், 4,300 ஆர்பிஎம்-இல் 139 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக இந்த பெட்ரோல் என்ஜின் உள்ளது.

இது இல்லாமல், 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷனிலும் விக்டோரிஸ் கார் கிடைக்கிறது. அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-இல் 92.45 பிஎஸ் ஆற்றலையும், 3,800 முதல் 4,800 ஆர்பிஎம்-இல் 122 என்.எம் டார்க் திறனையும் வழங்கக்கூடியதாக இந்த பெட்ரோல் ஹைப்ரீட் என்ஜின் உள்ளது.

maruti suzuki victoris suv cars sales

இதில், கே-சீரிஸ் பெட்ரோல் மாடல் 21 kmpl வரையிலான மைலேஜையும், ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடல் இ-சிவிடி (eCVT) கியர்பாக்ஸ் காம்பினேஷனில் 28.65 kmpl வரையிலான மைலேஜையும் வழங்குவதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. விக்டோரிஸ் சிஎன்ஜி காரில், பூட் ஸ்பேஸை அதிகரிக்கும் வகையில், சிஎன்ஜி டேங்க் தரைக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளது.

விக்டோரிஸ் எஸ்யூவி கார் 4,360 மிமீ நீளமும், 1,795 மிமீ அகலமும், 1,655 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் நீளம் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) 2,600 மிமீ ஆகும். விக்டோரிஸ் காரை 2-வீல்-டிரைவ் அல்லது ஆல்-வீல்-டிரைவ் ஆப்ஷனில் வாங்கலாம். இரட்டை வண்ணங்களில் உட்புற கேபின், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்பிளே இணைப்புடன் கூடிய 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற வசதிகள் இந்த லேட்டஸ்ட் மாருதி காரில் உள்ளன.

maruti suzuki victoris suv cars sales

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போன்ற பிரபலமான கார் மாடல்களுக்கு போட்டியாக விளங்கினாலும், அளவில் பெரியதான தோற்றத்துடன், குறைந்த விலையிலான மாருதி சுஸுகி காராக விக்டோரிஸ் தொடர்ந்து புது, புது வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. இதனால், வரும் மாதங்களில் இந்த மாடர்ன் மாருதி எஸ்யூவி காரின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 13, 2025, 14:51 [IST]
English summary
Maruti suzuki sold 13496 victoris cars in last october 2025 check all details here
மேலும்... #maruti suzuki #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X