ஒரே மாதத்தில் 2 லட்சம் பேர் மாருதி சுஸுகியை நம்பி போய் இருங்காங்க! 16 ஆயிரம் கார்கள் அதிகம் விற்பனை!

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki), 2025 அக்டோபர் மாதத்தில் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் மொத்தம் 2 லட்சத்து 20,894 கார்களை கடந்த அக்டோபரில் விற்பனை செய்துள்ளது. இது உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி எண்ணிக்கையை உள்ளடக்கியதாகும்.

கடந்த 2024 அக்டோபரில் பண்டிகைக் காலத்தில் விற்பனையான 2 லட்சத்து 6,434 மாருதி சுஸுகி கார்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அக்டோபரில் 7% வளர்ச்சியை மாருதி சுஸுகி அடைந்துள்ளது. இந்தியாவில் கார் வாங்குபவர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் 2025ஆம் ஆண்டின் முக்கிய தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலத்தில் மாருதி சுஸுகிக்கு குறிப்பிடத்தக்க விற்பனை எண்ணிக்கையை வழங்கியுள்ளனர்.

maruti suzuki october cars sales

தசரா மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் பொதுவாக கார் விற்பனையை அதிகரிக்கும் நிலையில், ஜிஎஸ்டி 2.0 வரி விகிதங்களில் சமீபத்திய திருத்தங்கள் மேலும் விலை குறைப்பிற்கு வழிவகுத்தன. இது கார் வாங்க திட்டமிட்டு வந்தவர்கள் பலரை ஈர்த்து, ஒட்டுமொத்த தொழில் விற்பனையை அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபரில் மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ள மொத்த 2,20,894 கார்களில் வெறும் 31,304 கார்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும்.

கடந்த அக்டோபர் மாதத்தில் மாருதியின் மொத்த உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை எண்ணிக்கை 1 லட்சத்து 76,318 யூனிட்கள் ஆகும். கடந்த ஆண்டு அக்டோபரில் விற்கப்பட்ட 1,59,591 யூனிட்களை விட 10.48% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் துவங்கிய 2025-26 நிதியாண்டின் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் மட்டும் மொத்தம் 9 லட்சத்து 71,764 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.

maruti suzuki october cars sales

இது இல்லாமல், 2.38 லட்சத்திற்கும் அதிகமான மாருதி சுஸுகி கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கடந்த 7 மாதங்களில் 12 லட்சத்து 11,527 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 11 லட்சத்து 85,649 கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. ஏறக்குறைய 26 ஆயிரம் கார்கள் குறைவு.

இத்தனைக்கும், கடந்த 2024ஆம் ஆண்டின் ஏப்ரல்- அக்டோபரில் உள்நாட்டில் மட்டும் 10 லட்சத்து 24,175 கார்களை விற்பனை செய்த போதிலும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை கடந்த நிதியாண்டில் குறைவாக இருந்துள்ளது. காரணம், அந்த காலக்கட்டத்தில் 1.80 லட்சம் மாருதி சுஸுகி கார்கள் மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.

maruti suzuki october cars sales

கடந்த அக்டோபர் எண்ணிக்கையை மேலும் பிரித்துப் பார்க்கும்போது, மாருதி சுஸுகியின் மினி கார்கள் பிரிவில் 9,067 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த லிஸ்ட்டில் ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ என்கிற இரு அளவில் சிறிய கார்கள் உள்ளன. இந்த கார்களின் கடந்த மாத 9,067 விற்பனை எண்ணிக்கை கடந்த ஆண்டு 10,687 யூனிட்களாக இருந்ததை விடக் குறைவு. அதேநேரம், மாருதி சுஸுகியின் காம்பாக்ட் கார்கள் விற்பனையில் சிறப்பான வளர்ச்சி காணப்பட்டுள்ளது.

ஸ்விஃப்ட், வேகன்ஆர் போன்ற பிரபலமான விலை குறைவான கார்கள் அடங்கிய இந்த பிரிவில் கடந்த ஆண்டு 65,948 யூனிட்களாக இருந்த விற்பனை, கடந்த மாதம் 76,143 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இவை இல்லாமல், கடந்த மாதத்தில் பிரெஸ்ஸா, எர்டிகா போன்ற சற்று விலைமிக்க கார்கள் மொத்தம் 77,571 கார்களும், 11,653 ஈக்கோ வேன்களும் மாருதி சுஸுகியில் இருந்து விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

Category: Sub-segment October April-October
Models 2025 2024 FY 2025-26 FY 2024-25
A: Mini Alto, S-Presso 9,067 10,687 49,472 72,474
A: Compact Baleno, Celerio, Dzire, Ignis, Swift, WagonR 76,143 65,948 445,559 432,369
Mini + Compact Segment 85,210 76,635 495,031 504,843
A: Mid-Size Ciaz - 659 1,980 4,800
Total A: Passenger Cars 85,210 77,294 497,011 509,643
B: Utility Vehicles Brezza, Ertiga, Fronx, Grand Vitara, Invicto, Jimny, Victoris, XL6 77,571 70,644 394,950 414,309
C: Vans Eeco 13,537 11,653 79,803 80,253
Total Domestic Passenger Vehicle Sales (PV) 176,318 159,591 971,764 1,004,205
Light Commercial Vehicles (LCV) 4,357 3,539 21,324 19,970
Total Domestic Sales including LCV (PV+LCV) 180,675 163,130 993,088 1,024,175
Sales to other OEM 8,915 10,136 67,778 64,233
Total Domestic Sales (PV+LCV+OEM) 189,590 173,266 1,060,866 1,088,408
Total Export Sales 31,304 33,168 238,763 181,444
Total Sales (Total Domestic + Export) 220,894 206,434 1,299,629 1,269,852

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜிஎஸ்டி 2.0 திருத்தம் மற்றும் பண்டிகை கால தேவையால் மாருதி சுஸுகியின் உள்நாட்டு விற்பனை அதிகரித்து இருப்பினும், விலை குறைவான ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸா கார்களின் விற்பனை குறைவாக பதிவாகி வருவது மாருதி சுஸுகிக்கு சற்று ஏமாற்றத்தை அளிக்கலாம். இது ஹேட்ச்பேக் கார்கள் மீதான வாங்குபவர்களின் ஆர்வம் குறைந்து வருவதை வெளிப்படுத்துகிறது. அதேபோல் ஆச்சரியப்படுத்தும் விதமாக, நடுத்தர அளவிலான சியாஸ் (Ciaz) கார் கடந்த மாதம் எந்த விற்பனையையும் பதிவு செய்யவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, November 3, 2025, 10:18 [IST]
English summary
Maruti suzuki sold more than 2 lakhs cars in last october 2025 check all details here
மேலும்... #maruti suzuki #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X