லிட்டருக்கு 19கிமீ மைலேஜ் தரும் மாருதி காருக்கு செம்ம டிமாண்ட்! 2.5 மாதங்களில் கதையே மாறி போச்சு!

மாருதி சுஸுகியின் புதிய நடுத்தர அளவு எஸ்யூவி கார் மாடலான விக்டோரிஸ் (Victoris), அறிமுகப்படுத்தப்பட்ட 2.5 மாதங்களுக்கு உள்ளேயே 30,000 யூனிட்கள் விற்பனையைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. கடந்த 2025 செப்டம்பரில் இரண்டாவது வாரத்தில் அறிமுகமான இந்த எஸ்யூவி கார், குறுகிய காலத்தில் ஆரம்பக்கட்ட டெலிவிரிகளில் (Deliveries) இருந்தே நிலையான மாத விற்பனை எண்ணிக்கைக்கு வேகமாக முன்னேறியது.

செப்டம்பர் மாதத்தில் வெளியீடு செய்யப்பட்ட மாருதி சுஸுகி விக்டோரிஸ் காருக்கு அந்த மாதத்திலேயே 4,261 யூனிட்கள் முன்பதிவாகின. அதன்பின், முதல் முழு மாத விற்பனைச் சுழற்சியை நிறைவு செய்வதற்கு முன்பே இந்த புதிய மாருதி கார் அக்டோபர் மாத தொடக்கத்திலேயே 25,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றது.

maruti suzuki victoris suv car sales

இதனால், அக்டோபர் மாதம் ஆனது விக்டோரிஸ் காரின் விற்பனையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த மாதத்தில் மட்டும் 13,496 விக்டோரிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு, இந்த காருக்கான நேரடி போட்டி கார்களை மட்டுமல்லாமல், மாருதி சுஸுகியின் சொந்த கிராண்ட் விட்டாரா (Grand Vitara) காரின் விற்பனையையும் 3,000 யூனிட்டுகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் மிஞ்சியது.

மாருதி சுஸுகியின் விலை குறைவான கார்கள் விற்பனை செய்யப்படும் அரினா (Arena) டீலர்ஷிப்கள் மூலம் விக்டோரிஸ் விற்பனை செய்யப்படும் நிலையில், கிராண்ட் விட்டாரா ஆனது விலையுயர்ந்த மாருதி சுஸுகி கார்கள் விற்பனை செய்யப்படும் நெக்ஸா (Nexa) ஷோரூம்களில் கிடைக்கிறது. அக்டோபரை தொடர்ந்து நடந்து முடிந்த கடந்த நவம்பர் மாதத்திலும் விக்டோரிஸின் விற்பனை வேகம் தொடர்ந்தது.

maruti suzuki victoris suv car sales

கடந்த நவம்பரில் 12,300 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், விக்டோரிஸ் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 30,000-ஐ கடந்தது. கிராண்ட் விட்டாராவையும் சேர்த்து, அக்டோபரில் மாருதி சுஸுகியின் நடுத்தர அளவு எஸ்யூவி கார்கள் விற்பனை 23,900 யூனிட்டுகளையும், நவம்பரில் 23,600 யூனிட்டுகளையும் கடந்தது. பெட்ரோல், சிஎன்ஜி (CNG) மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் (Strong Hybrid) ஆகிய மூன்று என்ஜின் ஆப்ஷன்களில் விக்டோரிஸ் கிடைக்கிறது.

வழக்கமான பெட்ரோல் என்ஜின் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும் நிலையில், இந்த காரின் ஹைப்ரிட் வேரியண்ட் ஆனது எரிபொருள் சிக்கனத்தை மையமாகக் கொண்டுள்ளது. இது லிட்டருக்கு 28.65 கி.மீ மைலேஜ் வழங்குகிறது. விக்டோரிஸ் சிஎன்ஜி வேரியண்ட்களில் காருக்கு பின்பக்கத்தில் அடித்தளத்தில் சிஎன்ஜி டேங்க் அமைக்கப்படுவதால், பூட்ஸ்பேஸ் வீணாகுவதில்லை.

அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.10.49 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்ட இந்த எஸ்யூவி கார் ஆறு வேரியண்ட்களில், சக்திவாய்ந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவருகிறது. அதன் மூலமாக, பாரத் NCAP மற்றும் குளோபல் NCAP என மோதல் சோதனைகள் இரண்டிலும் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடுகளை விக்டோரிஸ் பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2.5 மாதங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை என்பது ஆரம்பத்திலிருந்தே மாருதி சுஸுகி விக்டோரிஸ் காருக்கு டெலிவிரிகளை காட்டிலும் தேவை அதிகமாக இருந்து வருவதைக் காட்டுகிறது. நவராத்திரி (Navaratri) போன்ற பண்டிகைக் காலத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு கார் டெலிவிரி செய்யப்படுவது தொடங்கியதால், விற்பனை மேலும் வேகமாக நிலைபெற்றது.

முன் சக்கரங்களில் இயங்குவது அல்லது அனைத்து சக்கரங்களிலும் இயங்குவது உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்கள், நீண்ட தொழிற்நுட்ப அம்சப் பட்டியல் மற்றும் தொடர்ச்சியான மாதங்களில் வலுவான விற்பனை ஆகியவற்றுடன், வரவிருக்கும் 2026இல் இந்தியாவின் நடுத்தர அளவு எஸ்யூவி கார்கள் பிரிவில் விக்டோரிஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி அடுத்த மாதம் இ-விட்டாராவை அறிமுகப்படுத்தி தனது இருப்பை மேலும் வலுப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Sunday, December 14, 2025, 5:00 [IST]
English summary
Maruti suzuki sold more than 30000 victoris cars within two and half months
மேலும்... #maruti suzuki #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+