மலை மேல் பிரேக் போட்டு நின்றால் கூட கல்லு மாதிரி பல நாட்களுக்கு நிற்கும்! மாருதியின் தரமான சம்பவம்

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். ஆனால், கமர்ஷியல் வாகனங்களை விற்பனை செய்வதில் மாருதி சுஸுகி சற்று பின்தங்கி உள்ளது. இன்னும் சொல்லப்போனால், மாருதி சுஸுகியில் இருந்து விற்பனை செய்யப்படும் ஒரேயொரு கமர்ஷியல் வாகனம் சூப்பர் கேரி (Super Carry) ஆகும். இந்த சூப்பர் கேரி வாகனத்தை தான் தற்போது புதிய வசதிகள் உடன் மாருதி சுஸுகி நிறுவனம் மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. அப்படி என்ன மாதிரியான வசதிகள் சூப்பர் கேரியில் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான கார் நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது. இருப்பினும், கமர்ஷியல் வாகனங்கள் பிரிவை இந்த நிறுவனம் பெரியதாக கண்டுக்கொள்வது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெயருக்கு, சூப்பர் கேரி என்கிற ஒரேயொரு கமர்ஷியல் வாகனம் மட்டுமே மாருதி சுஸுகியில் இருந்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

maruti suzuki super carry launched

கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனம் முன்னிலை வகிப்பதற்கு, கார்களில் அவ்வப்போது கொண்டுவரும் அப்டேட்கள் முக்கியமான காரணம் ஆகும். அந்த வகையில், சூப்பர் கேரி கமர்ஷியல் வாகனமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு விடுகிறது. இருப்பினும், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சூப்பர் கேரி வாகனத்தை இதுவரையில் அறிமுகம் செய்யப்பட்ட சூப்பர் கேரி வாகனங்களிலேயே மிகவும் பாதுகாப்பானது என கூறலாம்.

ஏனெனில், சூப்பர் கேரியில் முதல்முறையாக புதியதாக எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் (Electronic Stability Program - ESP) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாகனத்தின் நிலைமைத்தன்மையை மேம்படுத்தக்கூடிய இந்த இஎஸ்பி ஆனது டிரைவரின் கேபின் மற்றும் பொருட்களை ஏற்றும் கார்கோ பகுதி என இரண்டையும் பாதுகாக்கக் கூடியது ஆகும். மேலும், குறுகலான வளைவுகளில் திரும்பும்போது வாகனத்தின் நிலைத்தன்மையை இஎஸ்பி பாதுகாக்கும்.

இதனுடன் சேர்த்து, புதிய மாருதி சுஸுகி சூப்பர் கேரி வாகனத்தில் ஆண்டி-லாக் பிரேக் சிஸ்டம் (ABS), எலக்ட்ரானிக் பிரேக்-ஃபோர்ஸ் (EBD) மற்றும் ஹைட்ராலில் பிரேக் அசிஸ்ட் (HBA) உள்ளிட்டவை வாகனத்தின் பிரேக் சிஸ்டத்தில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், வாகனம் சறுக்கி விழ நேர்ந்தால் சக்கரங்களை லாக் செய்யக்கூடிய என்ஜின் டிராக் கண்ட்ரோல் (EDC) என்கிற இயந்திர நுட்பமும் புதிய சூப்பர் கேரியில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், இந்த வாகனத்தில் வழங்கப்பட்டுள்ள டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் ஆனது சறுக்கலான சாலைகளில் வாகனத்திற்கு சிறந்த பிடிமானத்தை வழங்கும். மற்றப்படி, வாகனத்தின் என்ஜின் & கியர்பாக்ஸில் எந்த மாற்றமும் இல்லை. சூப்பர் கேரியில் 1.2 லிட்டர் கே-சீரிஸ் ட்யூயல் ஜெட், ட்யூயல் விவிடி என்ஜின் ஆனது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் சுமார் 270 நகரங்களில் மாருதி சுஸுகியின் 370க்கும் அதிகமான ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கவுள்ள புதிய மாருதி சுஸுகி சூப்பர் கேரி வாகனம் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிஎன்ஜி என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.49 லட்சத்தில் இருந்து ரூ.6.64 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புதிய அப்டேட்கள் மூலமாக இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான மினி டிரக் வாகனமாக மாருதி சுஸுகி சூப்பர் கேரி விளங்குகிறது. மற்ற மாருதி கார்களை போன்று, இந்த வாகனத்தை வாங்குவதும், அவற்றிற்கான சர்வீஸ்களை பெறுவதும் பெரியதாக சிரமமான வேலையாக இருக்காது. ஆதலால், சிறிய தொழில்களுக்கு புதிய மாருதி சுஸுகி சூப்பர் கேரியை தாராளமாக வாங்கி பயன்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 4, 2025, 23:49 [IST]
English summary
Maruti suzuki super carry launched with electronic stability control
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+