33 கிமீ மைலேஜ் தரும் காரின் விலை தர மட்டத்துக்கு குறையுது! ஓட்ட தெரியாதவங்களுக்கு கூட கார் வாங்கற ஆச வந்துரும்
அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும், விலை குறைவாக இருக்க வேண்டும் மற்றும் பராமரிப்பது மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்பது போன்ற அம்சங்கள்தான் புதிதாக கார் வாங்க கூடிய வாடிக்கையாளர்கள் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவற்றுடன் காரின் டிசைனும் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் நினைக்கின்றனர்.
வாடிக்கையாளர்களின் இந்த அத்தனை எதிர்பார்ப்புகளையும் ஒரு கார் முழுமையாக பூர்த்தி செய்வது கடினம். ஒரு சில கார்கள் அதிக மைலேஜ் வழங்கும். ஆனால் விலை குறைவாக இருக்காது. அதிகமாக இருக்கும். அதேபோல் வேறு சில கார்களோ கவர்ச்சிகரமாக இருக்கும். ஆனால் பராமரிப்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக அமைந்து விடும்.

இருப்பினும் ஒரு சில கார்கள் மட்டும் விதிவிலக்காக, வாடிக்கையாளர்களின் மேற்கண்ட அத்தனை எதிர்பார்ப்புகளையும் ஒரு சேர பூர்த்தி செய்யும். இதற்கு மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) ஒரு உதாரணம். மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், பெரிதாக எந்தவொரு குறையையும் கூற முடியாது.
மைலேஜ், விலை, பராமரிப்பு மற்றும் டிசைன் என வாடிக்கையாளர்களின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் முழுமையாக பூர்த்தி செய்கிறது. அத்துடன் தற்போதெல்லாம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.

இது போன்ற காரணங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காருக்கு மிக பிரம்மாண்டமான வெற்றியை தேடி தந்துள்ளன. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், உலக அளவில் 10 மில்லியன் (1 கோடி) யூனிட்கள் விற்பனை என்ற பிரம்மாண்டமான மைல்கல்லை, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் தற்போது கடந்துள்ளது.
குளோபல் சுஸுகி (Global Suzuki) தற்போது வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் முதன் முதலில் ஜப்பானில்தான் (Japan)விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம், ஜப்பானில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் முதல் தலைமுறை மாடல் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.
இதை தொடர்ந்து 2005ம் ஆண்டு மே மாதம், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் முதல் முறை மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்ட நிலையில், உலக அளவில் 1 கோடி மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதில், இந்தியாவில் மட்டும் 60 சதவீத மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன. அதாவது 6 மில்லியன் யூனிட்கள் (60 லட்சம்). அதே நேரத்தில் ஐரோப்பிய பிராந்தியத்தில் 14 சதவீத கார்களும், ஜப்பானில் 8 சதவீத கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உலகின் மற்ற பகுதிகளில் ஒன்று சேர்த்து, 18 சதவீத கார்கள் விற்பனையாகியுள்ளன.
இந்தியாவில் தற்போது விற்பனையில் இருப்பது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 4வது தலைமுறை மாடல் ஆகும். இந்திய சந்தையில் இதன் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் வெறும் 6.49 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது தற்போது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
ஜிஎஸ்டி (GST) வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால், வரி குறைப்பு அமலுக்கு வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு பின்னர், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை உங்களால் இன்னும் குறைவான விலையிலேயே வாங்கி விட முடியும் (மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை சுமார் 60 ஆயிரம் ரூபாய் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன).
அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர் மைலேஜை (Mileage) வாரி வழங்குகின்றன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) போன்ற ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








