33 கிமீ மைலேஜ் குடுக்கற காரோட விலை இவ்ளோதானா! அண்ணாச்சி கடைல மளிகை சாமான் வாங்கற மாதிரி வாங்கீட்டு இருக்காங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து கொண்டுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்த பின்னரும் கூட, இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து சிறப்பாக இருந்து வருகிறது. இது நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் தொடர்ந்துள்ளது.

2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16,269 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

Maruti Suzuki Swift

இது கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13,165 ஆக மட்டுமே இருந்தது. இது 24 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் (Top 10 Cars) பட்டியலில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் 4வது இடத்தை பிடித்துள்ளது.

முதல் 3 இடங்களில் முறையே மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx), மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) ஆகிய கார்கள் இருக்கின்றன. லான்ச் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 2 தசாப்தங்களை (20 வருடங்கள்) கடந்த பின்னரும் கூட, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை சிறப்பாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

Maruti Suzuki Swift Side Design

மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரை சீரான இடைவெளிகளில் தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொண்டே இருப்பது இதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இந்த வரிசையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை மாடல் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 4வது தலைமுறை மாடல் ஆகும். இதுதான் தற்போது விற்பனையில் இருந்து கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் (Lxi) விலை 6.49 லட்ச ரூபாயாக உள்ளது.

மறுபக்கம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் டாப் வேரியண்ட்டின் (Zxi+ AGS) விலையோ 9.50 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும். மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ப்ளஸ் பாயிண்ட்களை அடுக்கி கொண்டே போகலாம்.

ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுவது, 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் (Features) எல்லாம் இடம்பெற்றிருப்பது போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

அத்துடன் கவர்ச்சிகரமான டிசைனும், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்று. இவற்றுடன், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் மைலேஜ் (Mileage) மிகவும் சிறப்பான ஒரு அம்சமாக கருதப்படுகிறது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், 3 விதமான இன்ஜின் / கியர் பாக்ஸ் காம்பினேஷில் கிடைக்கிறது.

இதில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் / மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.80 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன. அதே நேரத்தில் பெட்ரோல் / ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 25.75 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன.

இவை எல்லாவற்றையும் விட, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி / மேனுவல் வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏற்ற கார் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனையில் அனல் பறக்கிறது என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 10, 2025, 17:08 [IST]
English summary
Maruti suzuki swift sales report february 2025 24 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+