ராத்திரி பகல் பாக்காம உழைச்சும் இப்படி ஆயிருச்சே! 33 கிமீ மைலேஜ் தரும் மலிவு விலை காருக்கு நடந்த சோகம்!

இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் 20 வருடங்களாக விற்பனையில் இருந்து வருகிறது. இருப்பினும் தொடர்ச்சியான அப்டேட்கள் மூலமாக மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரை தற்போதும் 'ப்ரெஷ்' ஆக வைத்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு நிதியாண்டிலும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இதற்கு கடந்த 2024-25ம் நிதியாண்டும் விதிவிலக்கல்ல.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் கடந்த 2024-25ம் நிதியாண்டிற்கான (2024 ஏப்ரல் 1-2025 மார்ச் 31) சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2024-25ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 1,79,641 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்துள்ளது.

Maruti Suzuki Swift Side Design

ஆனால் அதற்கு முந்தைய 2023-24ம் நிதியாண்டில் (2023 ஏப்ரல் 1-2024 மார்ச் 31) ஒட்டுமொத்தமாக 1,95,321 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 15,680 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 8 சதவீத வீழ்ச்சி ஆகும்.

சரிவை சந்தித்திருந்தாலும் கூட, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை பிரம்மாண்டமானது என்பதில் சந்தேகம் இல்லை. இதன் மூலம் கடந்த 2024-25ம் நிதியாண்டில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் (Top 10 Hatchbacks), மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் 2வது இடத்தை பிடித்துள்ளது.

Maruti Suzuki Swift

முதல் இடத்தில் இருப்பது மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) ஆகும். 1,98,451 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதன் மூலம், கடந்த 2024-25ம் நிதியாண்டில் மிகவும் அதிகமாக விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி வேகன் ஆர் முதல் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

மாருதி சுஸுகி வேகன் ஆர் மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகிய 2 கார்களுக்கும் இடையேயான வித்தியாசம் 18,810 யூனிட்களாக உள்ளது. இந்த பட்டியலில் 3வது மற்றும் 4வது இடத்தில் இருக்கும் கார்கள் கூட மாருதி சுஸுகி நிறுவனத்துடையதுதான். அவை மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) ஆகியவை ஆகும்.

இதன் மூலம் இந்தியாவின் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆதிக்கம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியின் தொடக்கத்தில் நாம் பேசிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய அதே நேரத்தில் ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய கார்களில் ஒன்றாகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் 6.49-9.50 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-showroom Price) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் வேரியண்ட்களிலேயே அதிக மைலேஜ் வழங்குவது அதன் சிஎன்ஜி வேரியண்ட்கள்தான். அவற்றின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி இன்ஜினியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடும் உழைப்பின் விளைவாக ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை மாடல், கடந்த 2024-25ம் ஆண்டின் தொடக்கத்தில் (2024 மே மாதம்) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. எனினும் இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான கார் என்பதால், நடப்பு 2025-26ம் நிதியாண்டில் சரிவில் இருந்து மீண்டு வந்து விடும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 22, 2025, 23:33 [IST]
English summary
Maruti suzuki swift sales report financial year 2024 25 8 per cent down all details
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+