33 கிமீ மைலேஜை வாரி வழங்கும் கார்! 20 வருஷம் ஆகியும் தேக்கு மாதிரி ஸ்ட்ராங்கா நிக்குது! விலை இவ்ளோதானா!

அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த கார், கடந்த 2005ம் ஆண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்த பின்னரும் கூட, இந்தியாவில் இன்னமும் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் திகழ்கிறது. இதன்படி கடந்த ஜனவரி மாதமும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து அசத்தியுள்ளது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் கடந்த ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 17,081 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 15,370 ஆக மட்டுமே இருந்தது.

Maruti Suzuki Swift

இதன் மூலம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் விற்பனையில் 11 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars), மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் 4வது இடத்தையும் பிடித்துள்ளது.

முதல் 3 இடங்களில் முறையே மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) ஆகிய கார்கள் உள்ளன. சரி, நாம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை பற்றிய விஷயங்களுக்கு வருவோம்.

Maruti Suzuki Swift Side Design

மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரை சீரான இடைவெளிகளில் தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொண்டே வருகிறது. கடந்த 2024ம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை மாடலை இதற்கு ஒரு உதாரணமாக சொல்லலாம். இது போன்ற தொடர்ச்சியான அப்டேட்கள் காரணமாகவே 2 தசாப்தங்களை கடந்த பின்னரும் கூட, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் விற்பனையில் வெற்றி கொடி நாட்டி கொண்டுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரின் ஆரம்ப விலை 6.49 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது ஆரம்ப நிலை Lxi வேரியண்ட்டின் விலை ஆகும். அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டான Zxi+ ஏஜிஎஸ் வேரியண்ட்டின் விலை 9.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

பொதுவாக மாருதி சுஸுகி கார்களின் பாதுகாப்பு தரம் கேள்விக்குறியாக்கப்படும். ஆனால் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் இது அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் உள்ளது. இருப்பதிலேயே அதிகபட்சமாக இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் திகழ்கிறது. இந்தியாவின் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மிகவும் ஏற்றது என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Saturday, February 8, 2025, 14:55 [IST]
English summary
Maruti suzuki swift sales report january 2025 11 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+