33 கிமீ மைலேஜ் தரும் காரின் விலை இவ்ளோதானா! அடிபட்ட சிங்கத்தோட மூச்சு காத்து கர்ஜனைய விட பயங்கரமா இருக்கும்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இதன் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை 16 சதவீதம் குறைந்துள்ளது.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 16,854 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 14,190 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில், 2,664 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Maruti Suzuki Swift Side Design

இது 16 சதவீத வீழ்ச்சி ஆகும். இருப்பினும் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars July 2025), மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் 5வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 4 இடங்களில் முறையே மாருதி சுஸுகி டிசையர், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் மாருதி சுஸுகி வேகன் ஆர் ஆகிய கார்கள் உள்ளன.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமானது. எனவே தற்போது ஏற்பட்டுள்ள சரிவு தற்காலிகமான ஒன்றாக மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். இதன் காரணமாக கூடிய விரைவில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maruti Suzuki Swift

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.49 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.50 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 20 வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் இன்னமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு காராக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் திகழ்கிறது. இதற்கு அதன் வசதிகள் (Features) மற்றும் மைலேஜூம் (Mileage) மிக முக்கியமான காரணங்களாக உள்ளன.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், 9 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் என ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் பாதுகாப்பிற்காக (Safety) இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.

அதே நேரத்தில் இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் கூறப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கருதப்படுகிறது. அத்துடன் ஹேட்ச்பேக் ரக காரான இது, டாடா பன்ச் (Tata Punch) போன்ற மைக்ரோ எஸ்யூவி ரக கார்களுக்கும் கூட மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்தான்.

More from DriveSpark

Article Published On: Friday, August 8, 2025, 14:32 [IST]
English summary
Maruti suzuki swift sales report july 2025 16 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+