33 கிமீ மைலேஜ் காரை அடி மாட்டு விலையில் வித்தும் ஷோரூம் காத்து வாங்குது! அந்த கம்பெனிக்கே இப்படி ஒரு நிலைமையா!

இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில கார்களை பற்றி அறிமுகமே தேவையில்லை. இதில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரும் ஒன்று. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக இருந்தாலும் கூட, நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டிற்கு சரியாக அமையவில்லை.

தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், விற்பனையில் 27 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 19,393 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Maruti Suzuki Swift

ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 14,135 ஆக சரிவடைந்துள்ளது. இது 27 சதவீத வீழ்ச்சி ஆகும். இதன் காரணமாக நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars May 2025), மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டிற்கு 6வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

முதல் 5 இடங்களில் முறையே மாருதி சுஸுகி டிசையர், மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகிய கார்கள் உள்ளன. இந்த வரிசையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரால் 6வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்துள்ளது.

Maruti Suzuki Swift Side Design

ஆனால் இது தற்காலிகமான சரிவாக மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். கூடிய விரைவில், அனேகமாக நடப்பு ஜூன் மாதத்திலேயே கூட, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், சரிவில் இருந்து மீண்டு, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஏனெனில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மிகவும் குறைவான விலையில் கிடைக்க கூடிய, அதே நேரத்தில் நல்ல மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகும். மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை வெறும் 6.49 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

அதே நேரத்தில் இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல ஆப்ஷன்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரின் புதிய ஹைப்ரிட் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதற்கு ஏற்ற வகையில், இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டபோது, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஹைப்ரிட் வெர்ஷன் கேமரா கண்களிலும் சிக்கியது.

எனவே இந்தியாவில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் புதிய ஹைப்ரிட் வெர்ஷன் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை புதிய ஹைப்ரிட் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டால், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 7, 2025, 23:59 [IST]
English summary
Maruti suzuki swift sales report may 2025 27 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+