33 கிமீ மைலேஜ்! டாடா, ஹூண்டாயை கதற விடும் மாருதியின் விலை குறைவான கார்! ஷோரூம்ல கூட்டம் அலை மோதுது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இதன் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 19,733 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன.
ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், வெறும் 14,737 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 4,996 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் விற்பனையில் 34 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலமாக நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars November 2025), மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், 3வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் 2 இடங்களை முறையே டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) ஆகிய கார்கள் பிடித்துள்ளன. இந்த வரிசையில் 3வது இடம் பிடித்துள்ள மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.79 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 8.65 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் இருப்பதிலேயே அதிகபட்சமாக 32.85 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.
ஓரளவிற்கு குறைவான விலை, சிறப்பான மைலேஜ் ஆகிய சிறப்பம்சங்கள் உடன், ஏராளமான வசதிகளையும் (Features) மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கொண்டுள்ளது. இதில், வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், சுஸுகி கனெக்ட் மற்றும் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
அத்துடன் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற வாடிக்கையாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளும் (Safety Features), மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios), டாடா பன்ச் (Tata Punch) மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கருதப்படுகிறது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








