33 கிமீ மைலேஜ் தரும் காரை இந்த ரேட்ல விக்க பெரிய மனசு வேணும்! இதுக்காக மாருதிக்கு கோயிலே கட்டி கும்பிடலாம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இதன் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெறும் 15,542 ஸ்விஃப்ட் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17,539 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Maruti Suzuki Swift Side Design

அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 1,997 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் விற்பனையில் 11 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அத்துடன் இந்த வீழ்ச்சி காரணமாக, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars October 2025), மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காருக்கு 10வது மற்றும் கடைசி இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

Maruti Suzuki Swift

இந்த பட்டியலில் முதல் 9 இடங்களில் முறையே டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி டிசையர், மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி வேகன் ஆர், ஹூண்டாய் க்ரெட்டா, மஹிந்திரா ஸ்கார்பியோ, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ், மாருதி சுஸுகி பலேனோ மற்றும் டாடா பன்ச் ஆகிய கார்கள் உள்ளன.

இந்த வரிசையில் 10வது மற்றும் கடைசி இடம் பிடித்துள்ள மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை வெறும் 5.79 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 8.65 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

இது ஓரளவிற்கு விலை குறைவானது என்பதுடன் அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 24.80 கிலோ மீட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 25.75 கிலோ மீட்டர்களாக உள்ளது.

மறுபக்கம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர்களாக இருக்கிறது. இவை அனைத்தும் மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) போன்ற ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு மட்டுமல்லாது, டாடா பன்ச் (Tata Punch) போன்ற மைக்ரோ எஸ்யூவி ரக கார்களுக்கும், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, November 23, 2025, 23:33 [IST]
English summary
Maruti suzuki swift sales report october 2025 11 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+