மிடில்-க்ளாஸ் குடும்பங்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் விலை குறைவான கார்! 33 கிமீ மைலேஜ் குடுக்குதா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இந்த ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் இந்திய சந்தையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து, 21வது ஆண்டில் தற்போது அடியெடுத்து வைத்துள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு மே மாத இறுதியில்தான், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், இந்திய சந்தையில் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த 6 ஆண்டுகளில், அதாவது கடந்த 2011ம் ஆண்டு, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 2வது தலைமுறை மாடல் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.

இதை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டில் 3வது தலைமுறை மாடலும், கடந்த 2024ம் ஆண்டு 4வது தலைமுறை மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 4வது தலைமுறை மாடல்தான் இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து வருகிறது.
இடைப்பட்ட 20 ஆண்டுகளில், 30 லட்சத்திற்கும் அதிகமான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டன. இத்தனைக்கும் 30 லட்சம் யூனிட்கள் என்ற விற்பனை மைல்கல்லை (Sales Milestone) மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதமே கடந்து விட்டது.

இடைப்பட்ட இந்த ஒரு வருடத்தில் மேலும் 1.50 லட்சம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கை, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை, இந்திய வாடிக்கையாளர்கள் எவ்வளவு விரும்புகின்றனர்? என்பதை எடுத்து காட்டுகிறது.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் அனைத்து இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர்கள் மற்றும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள் ஆகிய பாதுகாப்பு வசதிகளும் (Safety Features), இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் ரோல்ஓவர் மிட்டிகேஷன் உடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் கார் கொண்டுள்ளது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், 10 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைக்கிறது.
அவை வெள்ளை, சில்வர், க்ரே, ஆரஞ்ச், ப்ளூ, கருப்பு, சிகப்பு, வெள்ளை/கருப்பு நிற மேற்கூரை, ப்ளூ/கருப்பு நிற மேற்கூரை மற்றும் சிகப்பு/கருப்பு நிற மேற்கூரை ஆகியவை ஆகும். அத்துடன் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரில் ஏராளமான வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன.
இதில், 9 இன்ச் ஸ்மார்ட் ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும். அத்துடன் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல்/மேனுவல், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களின் மைலேஜ் முறையே ஒரு லிட்டருக்கு 24.80 கிலோ மீட்டர்கள் ஆகவும், 25.75 கிலோ மீட்டர்கள் ஆகவும் இருக்கிறது. இதை விட அதிக மைலேஜ் வேண்டுமென்றால், நீங்கள் சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்களை தேர்வு செய்யலாம்.
ஏனெனில் அதன் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர்கள் ஆகும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை வெறும் 6.49 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 9.49 லட்ச ரூபாய் மட்டுமே. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சரியான விலை நிர்ணயம், சிறப்பான மைலேஜ் மற்றும் வசதிகள், கவர்ச்சிகரமான டிசைன், மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பு ஆகிய அம்சங்கள் எல்லாம் ஒருங்கிணைந்துதான், ஸ்விஃப்ட் காரை வெற்றிகரமான கார்களில் ஒன்றாக மாற்றியுள்ளன. மிடில்-க்ளாஸ் வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு உள்ளதால், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இன்னும் பல தசாப்தங்களுக்கு விற்பனையில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








