32 கிமீ மைலேஜ் தர்ற 7 சீட்டர் காரை அடி மாட்டு விலையில் களமிறக்கும் மாருதி! வெடவெடத்து போன போட்டி நிறுவனங்கள்!

இந்தியாவில் எம்பிவி ரக கார்களுக்கு (MPV Cars) மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது. அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதுதான் இதற்கு முக்கியமான காரணம். வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் இருப்பதால், கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நிறுவனங்களும், எம்பிவி ரக கார்களை விற்பனை செய்து வருகின்றன. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக திகழும் மாருதி சுஸுகி 2 எம்பிவி ரக கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளது. அவை மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) ஆகியவை ஆகும்.

ஆனால் மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஆகிய 2 எம்பிவி கார்களின் விலையும் சற்று அதிகம் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை 8.84 லட்ச ரூபாயாக இருக்கிறது.

Suzuki Spacia

மறுபக்கம் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் ஆரம்ப விலையோ 11.71 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரும் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் இதைக்காட்டிலும் குறைவான விலையில் புத்தம் புதிய எம்பிவி ரக கார் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இது ஜப்பானில் (Japan) பிரபலமாக உள்ள சுஸுகி ஸ்பாசியா (Suzuki Spacia) அடிப்படையில் உருவாக்கப்படும் கார் ஆகும். ஜப்பானில் அளவில் சிறிய கார்களை 'கெய் கார்' (Kei Car) என்பார்கள். நாம் தற்போது பேசி கொண்டுள்ள சுஸுகி ஸ்பாசியா இந்த ரகத்தை சேர்ந்ததுதான்.

Suzuki Spacia Side Design

ஜப்பானில் விற்பனை செய்யப்படும் சுஸுகி ஸ்பாசியா காரின் நீளம் 3,395 மிமீ மட்டுமே. இது 2 வரிசை இருக்கைகளை மட்டுமே கொண்டுள்ளது. அத்துடன் 'கெய் கார்' என்பதால் 660 சிசி இன்ஜின் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயங்களில் எல்லாம் மாற்றங்களை செய்து, ஒரு முழுமையான எம்பிவி ரக காராக மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

அதாவது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள மாடலின் நீளம் சற்று அதிகமாக இருக்கும். நீளம் அதிகரிக்கப்பட்டாலும் கூட, இது சப்-4 மீட்டர் மாடலாகவே இருக்கும். அதேபோல் 2 வரிசை இருக்கைகளுக்கு மாற்றாக 3 வரிசை இருக்கை அமைப்பு வழங்கப்படும். இதன் மூலம் இந்த காரில் 2+3+2 என்ற அடிப்படையில் 7 பேர் பயணம் செய்ய முடியும்.

இந்த வரிசையில் ஜப்பான் வெர்ஷன் உடன் ஒப்பிடும்போது, இந்திய வெர்ஷனில் இன்ஜின் ஆப்ஷனிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இதன்படி இந்திய வெர்ஷனில் 1.2 லிட்டர் இஸட் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரை YDB என்ற குறியீட்டு பெயரில் அழைக்கிறது.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில், கம்பீரமான ஒரு பெயருடன், இந்த கார் களமிறக்கப்படும். ஆனால் ஸ்லைடிங் டோர் போன்ற வசதிகளை எல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது. ஜப்பானில் விற்பனையில் உள்ள சுஸுகி ஸ்பாசியா காரில் ஸ்லைடிங் டோர் வசதி இருக்கிறது. ஆனால் இந்திய வெர்ஷனில் இந்த வசதி இருக்காது என தெரிகிறது.

குறைவான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றால், ஸ்லைடிங் டோர் வசதியை எல்லாம் வழங்க முடியாது. எனவே மாருதி சுஸுகி நிறுவனம் இதை நீக்கி விடும் என கருதப்படுகிறது. இருப்பினும் இது அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய எம்பிவி கார்களில் ஒன்றாக இருக்கலாம்.

அதாவது மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உடன் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனையும் வழங்கும் என நாங்கள் கருதுகிறோம். அப்படி வழங்கப்பட்டால், இதன் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு சுமார் 32 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய எம்பிவி கார், இந்தியாவில் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காருக்கு நேரடி போட்டியாக இருக்கும். அனேகமாக இந்த புதிய எம்பிவி காரின் ஆரம்ப விலையை மாருதி சுஸுகி நிறுவனம் வெறும் 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.

Take a Poll

இந்த விலையில் வந்தால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த எம்பிவி ரக கார் அடுத்த ஆண்டு (2026) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த கார் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, அரேனா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாறாக பிரீமியம் கார்கள் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம்கள் மூலமாகவே இந்த கார் விற்பனையாகும் என கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 18, 2025, 17:58 [IST]
English summary
Maruti suzuki to launch affordable mpv car in india 32 kmpl mileage price rs 6 lakh
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+