இந்த ஷோரூம்கள் வழியா மட்டும் 60 லட்சம் கார்களை வித்துட்டாங்க! மக்கள் நம்பி வாங்கி இதுல என்ன கிடைக்குது?
மாருதி நிறுவனம் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான மாருதி ட்ரூ வேல்யூ என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறது. கடந்த 2001ம் ஆண்டு முதல் இந்நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில் இதுவரை 60 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் புதிய கார்களை வாங்குவதை விட ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான மார்கெட்டில் மிகப்பெரிய வர்த்தகம் இருக்கிறது. இந்நிலையில் மாருதி நிறுவனம் இந்த பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி விற்பனை செய்ய கடந்த 2001ம் ஆண்டு மாருதி ட்ரூ வேல்யூ என்ற நிறவனத்தை துவங்கியது. இதன் மூலம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வாகனங்களை வாங்கி அதை செக் செய்து அதில் ரிப்பேர்கள் இருந்தால் சரி செய்து அதை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

இந்த துறையில் ஏகப்பட்ட ஏமாற்று வேலைகள் நடப்பதால் மாருதி போன்ற நிறுவனங்கள் இதில் தனி பிரிவை ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்கள் மத்தியில் நம்ப தன்மையை பெற்றுள்ளது. மக்கள் பலர் தனியாக கார் வாங்குவதை விட இப்படியாக ஒரு பெரிய நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதை விரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் இந்நிறுவனம் 60 லட்சம் கார்கள் என்ற மைல் கல்லை எட்டி பிடித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த 2024-25ம் நிதியாண்டில் மட்டும் மொத்தம் 4,92,697 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த 24 ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சியை சந்தித்து வருகிறது.

இந்த நிறுவனம் மக்களுக்கு கனிவான உபசரிப்பு, சிம்பிளாக வாகனம் வாங்கும் சூழ்நிலை, ஒளிவு மறைவற்ற வர்த்தகம், நம்பதன்மை, உள்ளிட்ட பல விஷயங்கைளை வழங்குவதால் மக்கள் மத்தியில் இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை எழுந்துள்ளது. முக்கியமாக முதன் முறையாக கார் வாங்கும் பலர் இந்த நிறுவனத்தின் மூலம் பயன்படுத்தப்பட்ட கார்களையே வாங்கி வருகின்றனர்.
இந்நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவையை உறுதி செய்ய மொத்தம் 376 சோதனைகளை கார்களில் செய்கிறது. அதில் ஏதாவது மாருதி காரின் உதிரி பாகங்களை மாற்ற வேண்டியது இருந்தால் மாருதி நிறுவனத்தின் அசல் உதிரி பாகங்களையே இதில் பயன்படுத்துகின்றனர். அதை கொண்டே காரை புதுப்பிக்கின்றனர். அதே நேரம் வாகனத்தை வாங்குபவர்களுக்கு இதற்கு முன்னர் காரை பயன்படுத்தியவர்கள் சர்வீஸ் செய்த நிலை, சரியான ஆவணங்கள், எல்லாம் கிடைக்கும்.
மேலும் இந்நிறவனம் இதன் மூலம் வாகனம் வாங்குபவர்களுக்கு ஒராண்டிற்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது. மேலும் 3 இலவச சர்வீஸ் களும் வழங்கப்படுகிறது. புதிய கார் வாங்கும்போது எப்படியான அனுபவம் கிடைக்குமோ அதே அனுபவம் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கும்போதும் கிடைக்கும் வகையில் இந்த நிறுவனத்தை செட்டப் செய்துள்ளது.
இந்நிறவனம் இந்தியா முழுவதும் உள்ள 305 நகரங்களில் 606 ஷோரூம்களை வைத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் எளிதாக ஷோரூமை அணுகி தங்களுக்கான வாகனத்தை தேர்வு செய்யமுடியும். இதற்காக பயிற்றுவிக்கப்பட்ட வல்லுநர்கள் உதவியும் ஷோரூமிலேயே கிடைக்கிறது. இது மட்டுமல்லாமல் ட்ரூ வேல்யூ மொபைல் ஆப் மற்றும் வெப்சைட்கள் மூலம் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விற்பனை நடக்கிறது. டிஜிட்டல் முறையில் இந்த காரை வாங்க நினைப்பவர்கள் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
மாருதி நிறுவனம் ஸ்மா்ட் ஃபைனான்ஸ் முறையில் வாகனம் வாங்குபவர்களுக்க டிஜிட்டல் ஆப்ஷனை வழங்குகிறது. வங்கி மற்றும் என்பிஎஃப்சி முறையில் பரிவர்த்தனைகளை செய்கிறது. இதானல் கடன் மூலம் வாகனம் வாங்குபவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி ட்ரூ வேல்யூ நிறுவனம் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது. 60 லட்சம் கார்கள் விற்பனை என்பது சாதாரண விஷயம் அல்ல. இந்நிறுவனம் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கலாம். இந்நிறுவனத்தின் தேவை மக்களுக்கு அதிகமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








