நாட்டின் நம்பர் ஒன் கார் கம்பெனி முதல்முறையா எடுக்கும் முயற்சி! காரின் விலையை மட்டும் சொல்ல மாட்றாங்க!
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம். ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனம். இருப்பினும், மாருதி சுஸுகிக்கு இந்த 'பிளாக் எடிசன்' (Black Edition) கார்கள் மீது எல்லாம் பெரியதாக நம்பிக்கை இருந்தது இல்லை. முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் வழங்கப்படும் கார்கள் 'பிளாக் எடிசன்கள்' ஆகும்.
கார்களின் விற்பனையை அதிகரிக்க, கார் நிறுவனங்கள் தங்களது கார்களில் அவ்வப்போது புதியதாக பிளாக் எடிசன்களை அறிமுகம் செய்வது உண்டு. மற்றவர்களை போல் இல்லாமல் வித்தியாசமான தோற்றத்தில் கார் வாங்க நினைப்பவர்களை டார்க் செய்து பிளாக் எடிசன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதிலிலும் குறிப்பாக, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை சமயத்தில் இவ்வாறான சிறப்பு பதிப்பு கார்கள் அதிகமாக மார்க்கெட்டிற்கு வருவது வழக்கம்.

பிளாக் எடிசன் என்கிற பெயரில் மட்டுமில்லாமல், டார்க் எடிசன் (Dark Edition), நைட் எடிசன் (Night Edition) என்கிற பெயர்களிலும் இவ்வாறான கருப்பு பதிப்பு எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் (Tata Motors), ஹூண்டாய் (Hyundai) நிறுவனங்களுக்கு தான் பிளாக் எடிசன்களின் மீது அதிக நம்பிக்கை உள்ளது.
ஆனால், இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி பெரியதாக நம்பிக்கை இல்லாமல் இருந்துவந்த நிலையில், மாருதி சுஸுகி நிறுவனம் தனது முதலாவது டார்க் எடிசன் காரை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. காரின் பெயர் விஷயத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் அட்வான்ஸாக யோசித்து, 'பாண்டோம் பிளாக் எடிசன்' (Phantom Balq Edition) என்கிற பெயரில் தனது முதல் பிளாக் எடிசன் காரை அறிமுகம் செய்ய உள்ளது.
முதல்முறையாக பிளாக் எடிசனை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்வதற்கு காரணம், நெக்ஸா ஷோரூம்களை (Nexa Showrooms) மாருதி சுஸுகி நிறுவனம் திறந்து வெற்றிக்கரமாக 10 வருடங்கள் கடந்துள்ளது ஆகும். நெக்ஸா ஆனது மாருதி சுஸுகி நிறுவனத்தின் விலையுயர்ந்த பிரீமியம் தரத்திலான கார்களை விற்பனை செய்யும் டீலர்ஷிப் ஷோரூம் ஆகும்.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் சமீபத்திய வளர்ச்சிக்கு முக்கியமான காரணங்களுள் ஒன்றாக விளங்கும் நெக்ஸா டீலர்ஷிப் ஷோரூம்களை திறந்து 10 வருடங்கள் ஆனதை நினைவுக்கூறும் விதமாகவே தனது கிராண்ட் விட்டாரா (Grand Vitara) காரில் புதியதாக பாண்டோம் பிளாக் எடிசனை காரை அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.
இவ்வாறான ஒரு கார் அறிமுகம் செய்ய உள்ளதாக மட்டுமே மாருதி சுஸுகி தெரிவித்து உள்ளதே அன்றி, அதை தவிர்த்து காரை பற்றிய எந்த விபரங்களையும் வெளியிடவில்லை. இதுதொடர்பாக மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ள படத்தில், கிட்டத்தட்ட வழக்கமான கிராண்ட் விட்டாரவை காரை போலவே புதிய பாண்டோம் பிளாக் எடிசனும் உள்ளது. என்ன... காரின் பெயிண்ட்டை மட்டும் கருப்பு நிறத்திற்கு மாற்றியுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 'பாண்டோம்' இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போன்று உங்களில் சிலருக்கு தோன்றலாம். இது, ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார் ஒன்றின் பெயர் ஆகும். வரவிருக்கும் தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை டார்க்கெட் செய்து புதிய கிராண்ட் விட்டாரா கார் மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. அறிமுகத்தின் போதுதான் காரின் விலைகள் அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








