குடும்பத்துடன் போக ஒன்னு, கம்மி விலைக்கு ஒன்னு! மாருதியின் அடுத்த 2 இவி கார்கள் இது தான்!
மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட் (எம்எஸ்ஐஎல்) சமீபத்தில் 2025 இந்திய மொபிலிட்டி எக்ஸ்போவில் தனது முதல் எலக்ட்ரிக் வாகனமான இ-விட்டாரா காரை வெளிப்படுத்தியது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது ஒரே சார்ஜில் 500 கிலோமீட்டருக்கும் அதிகமான ரேஞ்சை கொண்டுள்ளது. ஜப்பானிய கார் தயாரிப்பாளர் இந்திய சந்தைக்கான குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனங்களையும் உருவாக்கி வருகிறது, அவை அடுத்த சில வருடங்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுஸூகி தனது என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் கார்களுக்கு பெயர் பெற்றது மற்றும் எலெக்ட்ரிக் வாகன துறையிலும் இந்த பெயரை கொண்டு வர விரும்புகிறது. இந்த நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக்கில் வேலை செய்து வருகிறது, இது தற்போது Y2V என கோடு பெயருடன் குறியிடப்பட்டுள்ளது.

இது 2028 ஆம் ஆண்டில் உற்பத்திக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் 35kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் மற்றும் போட்டி விலையை பராமரிக்க இந்தியாவில் உள்ளூர் அளவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதனால் இந்திய மக்களின் விருப்பபடி குறைந்த விலையில் தரமான காரை இந்நிறுவனத்தால் இந்தியாவிற்குள் விற்பனைக்கு கொண்டு வர முடியும்.
Y2V ஹேட்ச்பேக் சுஸூகியின் eWX காண்செப்டிலிருந்து ஈர்க்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. அறிமுகப்படுத்தப்பட்டதும், இந்தியாவில் டாடா டியாகோ EV மற்றும் எம்ஜி கோமெட் போன்ற மாடல்களுக்கு இது போட்டியாக இருக்கும். மாருதி சுஸூகியின் திட்டப்படி எலெக்டரிக் வாகன சந்தையில் குறிப்பிடத்தக்க பங்கைப் பிடிக்க குறைந்த விலை மற்றும் உள்ளூர் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

ஹேட்ச்பேக்குகளுக்கு கூடுதலாக, மாருதி சுசுகி இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் எம்பிவியை உருவாக்கி வருகிறது. செப்டம்பர் 2026 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனம் YMC என்ற கோடு பெயருடன் குறிப்பிடப்படுகிறது. இது இ-விட்டாராவுடன் தனது தளத்தை பகிர்ந்து கொள்ளும் மற்றும் பின்னர் ஒரு டொயோட்டா எடிசனும் இதில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்பிவி இ-விட்டாராவைப் போன்ற அதே பவர் டிரெய்னைப் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எம்பிவிக்கு ஆண்டுக்கு சுமார் 50,000 முதல் 1 லட்சம் வாகனங்கள் வரை விற்பனை செய்யப்படும் என்று இந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது. வெளியிடப்பட்டதும், இந்திய சந்தையில் Kia Carens EV போன்ற எதிர்காலத்தில் வரும் மாடல்களுக்கு இது போட்டியாக இருக்கும். மாருதி சுசுகியின் பல்வேறு எலெக்ட்ரிக் வாகன லைன் அப்களில் கவனம் செலுத்துவது பல்வேறு வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

மாருதி சுசுகியின் எலெக்ட்ரிக் வாகன வரிசையை விரிவுபடுத்துவதற்கான உறுதிப்பாடு இந்தியாவில் ஸ்டெபிலிட்டிக்கான தீர்வுகளுக்கான அதன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. என்ட்ரி-லெவல் மற்றும் பெரிய குடும்ப-சார்ந்த EVகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், மலிவு விலை மற்றும் உள்ளூர் உற்பத்தி நன்மைகளை பராமரிக்கும் போதே வெவ்வேறு நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த நிறுவனம் முயற்சிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான காராக இருந்தால் நிச்சயம் வாங்குவார்கள் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனம் எவ்வளவு பெரிய வளர்ச்சியை பெறப்போகிறது என்பதை மாருதியின் இந்த முயற்சி எடுத்து காட்டுகிறது. சரியாக இந்திய மக்களின் மனதை புரிந்து குடும்பங்களுக்காக ஒரு கார், குறைந்த விலையில் ஒரு கார் என இந்நிறுவனம் விற்பனைக்கு கார்களை கொண்டு வருவது வரவேற்கதக்கது தான்.


Click it and Unblock the Notifications









