உலகையே திரும்பி பாக்க வைத்த மாருதி கார்! புல்டோசரே வந்து மோதுனாலும் கல்லு மாதிரி நிக்கும்! டாடா சோலி முடின்ச்!
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் (Maruti Suzuki Cars) பாதுகாப்பு இல்லாதவை என்ற குற்றச்சாட்டு வாடிக்கையாளர்கள் பலராலும் மிக நீண்ட காலமாகவே முன் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் மறுபக்கம் டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) போன்ற இந்திய நிறுவனங்கள், பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கின.
இதன் காரணமாக டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் கார்கள் குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) போன்ற அமைப்புகளின் மோதல் சோதனைகளில் சிறப்பாக செயல்பட தொடங்கின. எனவே மாருதி சுஸுகி நிறுவனமும் தற்போது பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளது.

இதனால் குளோபல் என்சிஏபி மற்றும் பாரத் என்சிஏபி அமைப்புகளின் மோதல் சோதனைகளில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு கார்களும், சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) சமீப காலமாக பெற ஆரம்பித்துள்ளன. இதற்கு புதுவரவான மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) ஒரு உதாரணம்.
மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. ஆனால் கூடிய விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் பாதுகாப்பு ரேட்டிங் குறித்த தகவல்கள் நமக்கு கிடைக்க தொடங்கி விட்டன.

மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், பாரத் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றிருந்தது நம் அனைவருக்குமே தெரியும். இந்த வரிசையில் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளிலும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் தற்போது முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது.
குளோபல் என்சிஏபி அமைப்பின் பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனைகளில் மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் 34க்கு 33.72 புள்ளிகளை ஸ்கோர் செய்து அசத்தியிருக்கிறது. மறுபக்கம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனைகளில் 49க்கு 41 புள்ளிகளை மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் ஸ்கோர் செய்து அசத்தியுள்ளது.
இதன் மூலம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 2 தரப்பினருக்குமான பாதுகாப்பிலும் 5 ஸ்டார் குளோபல் என்சிஏபி பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை விக்டோரிஸ் தன்வசமாக்கியுள்ளது. முன்னதாக மாருதி சுஸுகி டிசையர் காரும் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியுள்ளதுதான்.
ஆனால் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் மட்டுமே மாருதி சுஸுகி டிசையர் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியுள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் மாருதி சுஸுகி டிசையர் கார் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் மட்டுமல்லாது, பாரத் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளிலும், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என 2 தரப்பினருக்குமான பாதுகாப்பிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது என்பதும் கூட இங்கே குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்தான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டிராக்ஸன் கண்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் எல்லாம் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.
அதே நேரத்தில் டாப் வேரியண்ட்களில், லெவல் 2 அடாஸ், ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. எனவே அதிக பாதுகாப்புடன் கூடிய ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி ரக காரை எதிர்பார்க்க கூடிய இந்திய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி விக்டோரிஸ் மிகவும் ஏற்றதாக இருக்கும்.
பொதுவாக புது கார்களை வாங்கும்போது, குறைவான விலை, நல்ல மைலேஜ், கவர்ச்சிகரமான டிசைன், அதிநவீன வசதிகள், குறைவான பராமரிப்பு செலவு மற்றும் சிறப்பான ஆஃப்டர் சேல்ஸ் சர்வீஸ் ஆகிய அம்சங்களை எல்லாம் வாடிக்கையாளர்கள் பார்ப்பார்கள். வாடிக்கையாளர்களின் இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் மாருதி சுஸுகி கார்கள் ஏற்கனவே பூர்த்தி செய்து கொண்டுதான் உள்ளன.
ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் மட்டும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. தற்போது வலுவான பாதுகாப்பு என்ற வாடிக்கையாளர்களின் மற்றொரு மிக முக்கியமான எதிர்பார்ப்பையும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் பூர்த்தி செய்ய தொடங்கியுள்ளன. இது டாடா போன்ற போட்டி நிறுவனங்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








