29 கிமீ மைலேஜ் தரும் பாதுகாப்பான காரை நாளை களத்தில் இறக்குகிறது மாருதி! டாடாலாம் இனி என்ன ஆக போகுதோ தெரியல!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) கார், நாளை (செப்டம்பர் 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து மணி கண்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரானது, மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டை சேர்ந்தது ஆகும்.

மாருதி சுஸுகி நிறுவனம் விக்டோரிஸ் காரை ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வந்து விட்டது. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியிலேயே மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் வசதிகள், இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன.

Maruti Suzuki Victoris

இன்னும் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படுவது மட்டுமே பாக்கி. அதுவும் நாளை அறிவிக்கப்பட்டு விடும். மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில், லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS) மற்றும் டால்பி அட்மோஸ் ஆடியோ உள்ளிட்ட வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன. இந்த 2 வசதிகளையும் பெற்றுள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் கார் விக்டோரிஸ்தான்.

இதற்கு முன்பாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேறு எந்தவொரு காரிலும், இந்த 2 வசதிகளும் வழங்கப்பட்டது கிடையாது. அத்துடன் பனரோமிக் சன்ரூஃப், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், பிஎம் 2.5 ஏர் ப்யூரிஃபையர் மற்றும் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற வசதிகளும் கூட, மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

Maruti Suzuki Victoris Side Design

பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர்கள் போன்றவை எல்லாம், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரானது, பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) பெற்று அசத்தியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். செயல்திறனை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில், 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவை 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல்/சிஎன்ஜி இன்ஜின் ஆகியவை ஆகும். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் இ-சிவிடி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை எல்லாம் மாருதி சுஸுகி விக்டோரிஸ் கொண்டுள்ளது.

அத்துடன் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வசதியையும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் பெற்றுள்ளது. ஆனால் இப்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகி நிறுவனத்தின் அரேனா ஷோரூம்கள் மூலமாக மட்டுமே விக்டோரிஸ் விற்பனை செய்யப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

பொதுவாக இவ்வளவு வசதிகளை கொண்ட பிரீமியமான கார்கள் எல்லாம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம்கள் மூலமாகதான் விற்பனை செய்யப்படும். ஆனால் மாருதி சுஸுகி விக்டோரிஸ் அரேனா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படவுள்ளது. உலகம் முழுவதும் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரேனா ஷோரூம்கள் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யப்பட போவதில்லை. மாறாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளுக்கு மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. எனவே இதன் அறிமுகம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் வருகையானது, ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஹோண்டா எலவேட் (Honda Elevate), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) ஆகிய கார்களுக்கு எல்லாம் விற்பனையில் மிக கடுமையாக நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

அத்துடன் டாடா கர்வ் (Tata Curvv) போன்ற கார்களுக்கும் இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக இருக்கும். மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் பெட்ரோல் மற்றும் பெட்ரோல்/சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்களும் நல்ல மைலேஜ் (Mileage) வழங்க கூடியவைதான். ஆனால் இருப்பதிலேயே அதிகபட்சமாக இதன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 28.65 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 14, 2025, 16:18 [IST]
English summary
Maruti suzuki victoris launch tomorrow check all details here
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+