இந்திய மார்க்கெட்டையே தலைகீழா புரட்டி போட போகும் மாருதி கார் லான்ச் ஆனது! யாராலும் நம்ப முடியாத குறைவான விலை!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) கார், இன்று (செப்டம்பர் 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சற்று நேரத்திற்கு முன்பு, மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) பெற்று அசத்தியுள்ள ஒரு தயாரிப்பு ஆகும். இதன் மூலமாக பாதுகாப்பு விஷயத்தில், மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்த கார்களில் ஒன்றாக விக்டோரிஸ் திகழ்கிறது.

மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS), டால்பி அட்மாஸ் மியூசிக் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
அத்துடன் 60W மற்றும் 45W யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்கள், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய முன் பக்க இருக்கைகள் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற வசதிகளும், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் மிகவும் கவர்ச்சிகரமாக டிசைன் (Design) செய்யப்பட்டுள்ளது.

டிசைனை பொறுத்தவரையில், முழுமையான எல்இடி லைட்டிங், 17 இன்ச் ட்யூயல் டோன் அலாய் வீல்கள், டெயில்கேட்டின் மீது எல்இடி லைட் பார், சில்வர் நிறத்தில் ரூஃப் ரெயில்கள், முன் மற்றும் பின் பகுதியில் புதிய பம்பர்கள் போன்றவை எல்லாம், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் மிக முக்கியமான அம்சங்களாக உள்ளன.
அதே நேரத்தில் மைல்டு ஹைப்ரிட் ஆப்ஷன் உடன் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல்/சிஎன்ஜி என 3 வகையான இன்ஜின் ஆப்ஷன்களை (Engine Options) மாருதி சுஸுகி விக்டோரிஸ் கொண்டுள்ளது.
கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை (Gear Box Options) பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் இ-சிவிடி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தையும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் இன்ஜின் ஆப்ஷன்களிலேயே அதிக மைலேஜ் (Mileage) தருவது, ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆகும். அதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 28.65 கிலோ மீட்டர்கள் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிக மைலேஜ் எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கும், மாருதி சுஸுகி விக்டோரிஸ் மிகவும் ஏற்றதாக இருக்கும்.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் ஆரம்ப விலை வெறும் 10.50 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலில் மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் ஆரம்ப விலை சுமார் 12 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
ஆனால் அதற்கு மாறாக 10.50 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் மாருதி சுஸுகி விக்டோரிஸ் களமிறக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 19.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பதுடன், அறிமுக சலுகை விலை என்பதும் கவனிக்கத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் வருகை மூலமாக, ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), டாடா ஹாரியர் (Tata Harrier), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), எம்ஜி அஸ்டர் (MG Astor), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஹோண்டா எலவேட் (Honda Elevate) ஆகிய கார்களுக்கு எல்லாம் மிகப்பெரிய தலைவலி ஏற்பட போகிறது என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








