29 கிமீ மைலேஜ் தரும் காரை களத்தில் இறக்கிய மாருதி! எமனே எதிர்ல வந்தாலும் உசுர காப்பாத்தும்! டாடாவுக்கு மரண அடி

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) கார், இன்று மதியம் (செப்டம்பர் 3), பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில், பல்வேறு அதிநவீன வசதிகள் (Features) இடம்பெற்றுள்ளன.

இதில், லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS), பனரோமிக் சன்ரூஃப், ஸ்மார்ட் வாட்ச் கனெக்ட்டிவிட்டி, 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

Maruti Suzuki Victoris Side Design

அத்துடன் 360 டிகிரி வியூ ஹெச்டி கேமரா மற்றும் ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளையும், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் கொண்டுள்ளது. பிரீமியமான காராக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகி நிறுவனத்தின் அரேனா ஷோரூம்கள் மூலமாக மாருதி சுஸுகி விக்டோரிஸ் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த சூழலில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் அதிகாரப்பூர்வமான மைலேஜ் (Mileage) எவ்வளவு? என்ற தகவல்கள் தற்போது நமக்கு தெரிய வந்துள்ளன. மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில், மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. இதில், 1.5 லிட்டர் ஸ்மார்ட் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் ஒன்றாகும்.

Maruti Suzuki Victoris

இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த இன்ஜின், 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதன் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 21.18 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது.

அதே நேரத்தில் இதன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 21.06 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கிறது. அதே சமயம் இதன் ஆல் வீல் டிரைவ் ஆட்டோமேட்டிக் மாடல் ஒரு லிட்டருக்கு 19.07 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது.

மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் 2வது இன்ஜின் ஆப்ஷன், 1.5 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி ஆகும். இதன் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 27.02 கிலோ மீட்டர்கள் ஆகும். அதே சமயம் மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் 3வது இன்ஜின், 1.5 லிட்டர் பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஆகும்.

இதன் உடன் இ-சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் வழங்கப்படுகிறது. இதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 28.65 கிலோ மீட்டர்கள் ஆகும். இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள மைலேஜ் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஆக மொத்தத்தில், அதிநவீன வசதிகள் நிரம்பிய, அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி விக்டோரிஸ் திகழ்கிறது. அத்துடன் இது மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகவும் உள்ளது. ஏனெனில் பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) பெற்றுள்ளது.

ஆனால் மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் விலை (Price) எவ்வளவு? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. கூடிய விரைவில் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்பட்டு, மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. முன்னதாக மாருதி சுஸுகி விக்டோரிஸ் காருக்கு, அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலை நிர்ணயம் மட்டும் சரியாக செய்யப்பட்டு விட்டால், மாருதி சுஸுகி விக்டோரிஸ் இந்திய சந்தையில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இது டாடா கர்வ் (Tata Curvv), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்த போகிறது என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 3, 2025, 19:08 [IST]
English summary
Maruti suzuki victoris official mileage details out bookings now open
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+