மாருதி நிறுவனமே எதிர்பாக்காத அளவுக்கு புக்கிங் குவியுது! இப்பதான் லான்ச் ஆச்சு! அதுக்குள்ள இத்தன புக்கிங்கா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக மாறி வருகிறது மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris). சந்தைக்கு புதுவரவான இந்த கார், கடந்த செப்டம்பர் 15ம் தேதிதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதற்குள்ளாக மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரை, 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து விட்டனர்.

இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின்படி பார்த்தால், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காருக்கு தற்போதைய நிலையில் காத்திருப்பு காலம் 10 வாரங்கள் வரை உள்ளது. அதாவது மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரை நீங்கள் முன்பதிவு செய்தால், 10 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

Maruti Suzuki Victoris

ஆனால் இந்த காத்திருப்பு காலமானது, டீலர்ஷிப்கள், நகரங்கள், கலர் ஆப்ஷன்கள் மற்றும் வேரியண்ட்கள் ஆகியவற்றை பொறுத்து மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் ஆரம்ப விலை வெறும் 10.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

Maruti Suzuki Victoris Side Design

மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், பெட்ரோல், பெட்ரோல்/சிஎன்ஜி மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் என 3 இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், அதிக மைலேஜ் தருவது ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட்கள் ஆகும். அதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 28.65 கிலோ மீட்டர்கள் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில், ஏராளமான வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதில், பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன. அத்துடன் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) வசதியையும், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் கொண்டுள்ளது.

மேலும் 360 டிகிரி வியூ ஹெச்டி கேமரா, பிரேக் ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற வசதிகளும், மாருதி சுஸுகி விக்டோரில் காரில் வழங்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் தவிர, பனரோமிக் சன்ரூஃப் மற்றும் 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற வசதிகளும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் இது போன்ற அதிநவீன வசதிகளை கொண்டிருக்கும் அதே நேரத்தில், மிகவும் பாதுகாப்பான ஒன்றாகவும் கருதப்படுகிறது. ஏனெனில் பாரத் என்சிஏபி மற்றும் குளோபல் என்சிஏபி என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மாருதி சுஸுகி விக்டோரிஸ் கருதப்படுகிறது. அத்துடன் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்களுக்கும் கூட இது மிகச்சிறப்பான மாற்று ஆப்ஷன்தான்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 2, 2025, 23:57 [IST]
English summary
Maruti suzuki victoris receives over 25000 bookings check details
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+