போட்டி நிறுவனங்களை வெடவெடத்து போக வைத்த 29 கிமீ மைலேஜ் தரும் மாருதியின் புதிய கார்! புக்கிங் குவியுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris). மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார், கடந்த செப்டம்பர் 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக கடந்த செப்டம்பர் 4ம் தேதியில் இருந்தே மாருதி சுஸுகி விக்டோரிஸ் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனினும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டு இன்னும் முழுமையாக 2 மாதங்கள் கூட முடியவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே மாருதி சுஸுகி விக்டோரிஸ் காருக்கு 33 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் குவிந்து விட்டன. இது குறித்து மின்ட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Maruti Suzuki Victoris

மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை. இதில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதுதவிர 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளையும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் கொண்டுள்ளது.

அத்துடன் பனரோமிக் சன்ரூஃப், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஆம்பியண்ட் லைட்டிங், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய முன் பகுதி இருக்கைகள், டால்பி அட்மாஸ் மியூசிக் சிஸ்டம் மற்றும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்கள் போன்ற வசதிகளும், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.

Maruti Suzuki Victoris SUV

செயல்திறனை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில், மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல், ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் பெட்ரோல்/சிஎன்ஜி ஆகியவை ஆகும். இவை மூன்றுமே 1.5 லிட்டர் யூனிட்கள்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இவை மூன்றுமே நல்ல மைலேஜ் வழங்க கூடிய இன்ஜின்கள்தான். ஆனால் இதில் அதிக மைலேஜ் தருவது ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆகும். அதன் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஒரு லிட்டருக்கு 28.65 கிலோ மீட்டர்கள் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) என 2 முக்கியமான அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) பெற்றுள்ளது. எனவே வசதிகள், மைலேஜ் மற்றும் பாதுகாப்பு என அனைத்து அம்சங்களிலும், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் ஆரம்ப விலை 10.50 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 19.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி விக்டோரிஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Sunday, November 2, 2025, 23:16 [IST]
English summary
Maruti suzuki victoris receives over 33000 bookings in just 2 months
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+