29 கிமீ மைலேஜ்! லாரியே மோதினாலும் கல்லு மாதிரி நிற்கும்! உலகையே மிரள வைத்த மாருதி சுஸுகி கார்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris). மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சூழலில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் 12,300 மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த கார் விற்பனையிலேயே இல்லை என்பதால், இதன் விற்பனையை கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிட முடியாது. ஆனால் மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், விற்பனையில் சற்றே சரிவை சந்தித்துள்ளது.
அதாவது நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 13,496 மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு பிறகு வந்த நவம்பர் மாதத்தில், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 12,300 மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதாவது நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன்பின் வந்த நவம்பர் மாதத்தில், 1,196 மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், விற்பனையில் 8.86 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது சிறிய அளவிலான வீழ்ச்சி மட்டுமே என்பதால், கூடிய விரைவிலேயே இந்த கார், சரிவில் இருந்து மீண்டு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 28.65 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.
மறுபக்கம் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), பனரோமிக் சன்ரூஃப், 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகள் (Features) எல்லாம், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில் வழங்கப்படுகின்றன.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) பெற்று, அனைவரையும் பிரம்மில் ஆழ்த்தியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.50 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா செல்டோஸ் (Kia Seltos), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), டாடா ஹாரியர் (Tata Harrier), டாடா சியரா (Tata Sierra), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), எம்ஜி அஸ்டர் (MG Astor) மற்றும் ஹோண்டா எலவேட் (Honda Elevate) ஆகிய கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி விக்டோரிஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








