மிடில் க்ளாஸ் மக்களின் ரோல்ஸ் ராய்ஸ்! மார்க்கெட்டை தலைகீழா புரட்டி போடும் மாருதியின் புது கார்! விலை இவ்ளோதானா
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) கார், கடந்த செப்டம்பர் 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 22ம் தேதி, மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தொடங்கின.
இந்த சூழலில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின், முதல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், கடந்த செப்டம்பர் மாதம், 4,261 மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது மாருதி சுஸுகி விக்டோரிஸ் காருக்கு மிகவும் சிறப்பான ஒரு தொடக்கமாக கருதப்படுகிறது. ஏனெனில் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதிதான், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் டெலிவரி பணிகளே தொடங்கப்பட்டன. இந்த வகையில் பார்த்தால், வெறும் 9 நாட்களிலேயே, 4,261 மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டன.
எனவே இனி வரும் மாதங்களில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சம் இல்லை. இதில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இதுதவிர 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
செயல்திறனை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில், மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல்/சிஎன்ஜி மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஆகியவை ஆகும். இதில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின்தான் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கிறது.
அதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 28.65 கிலோ மீட்டர் என மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி விக்டோரிஸ், அதிநவீன வசதிகள் நிரம்பியது மற்றும் அதிக மைலேஜ் வழங்க கூடியது என்பதுடன், மிகவும் பாதுகாப்பான காராகவும் இருக்கிறது.
ஆம், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) வாங்கி, அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் ஆரம்ப விலை 10.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 19.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்தும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஹோண்டா எலவேட் (Honda Elevate) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி விக்டோரிஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது.


Click it and Unblock the Notifications








