டாடாவின் ஈரக்குலையை நடுங்க வைத்த மாருதியின் புதிய கார்! பேரையே ரணகளமா வெச்சிருக்காங்க! விலை இவ்ளோதானா!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் இன்று (செப்டம்பர் 3) அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சற்று நேரத்திற்கு முன்பு, மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி ரக கார், இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) என்ற பெயரில், இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை, பாதுகாப்பு (Safety) விஷயத்தில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தன.

Maruti Suzuki Victoris

ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தீவிர முயற்சிகள் காரணமாக, அதன் கார்கள், தற்போது மோதல் சோதனைகளில் (Crash Test) சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ளன. இந்த வரிசையில் மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரும், பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பு நடத்திய மோதல் சோதனையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

பாரத் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனையில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்று அசத்தியுள்ளது. எனவே இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக, மாருதி சுஸுகி விக்டோரிஸ் திகழ்கிறது.

Maruti Suzuki Victoris Side Design

மாருதி சுஸுகி விக்டோரிஸ் பாதுகாப்பானது என்பதுடன், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் (Features) நிரம்பியதாகவும் உள்ளது. மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் வசதிகளை பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு வசதியை பெற்றுள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் கார் விக்டோரிஸ்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அத்துடன் 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸட்டர், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அலெக்ஸா அஸிஸ்டன்ட் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளையும், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் கொண்டுள்ளது.

மேலும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, பின் பகுதியில் வெண்ட்கள் உடன் ஆட்டோமேட்டிக் ஏசி, 60க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகள் உடன் சுஸுகி கனெக்ட் மற்றும் 8 ஸ்பீக்கர் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளும், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளையும் இந்த கார் கொண்டுள்ளது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் மொத்தம் 10 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைக்கும். அத்துடன் ஃப்ரண்ட் வீல் டிரைவ், 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களை (Engine Options), மாருதி சுஸுகி விக்டோரிஸ் கொண்டுள்ளது. கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் இ-சிவிடி என மொத்தம் 3 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி நிறுவனம் விக்டோரிஸ் காரை தற்போது பொது பார்வைக்கு மட்டுமே கொண்டு வந்துள்ளது. இதன் விலை எவ்வளவு? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் ஆரம்ப விலை அனேகமாக 10-11 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே ஆகும். எனினும் கூடிய விரைவில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அப்போதுதான் விலை எவ்வளவு? என்பது முறைப்படி அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் வருகை, இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) போன்ற கார்களுக்கு எல்லாம், விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என நாங்கள் கருதுகிறோம். மேலும் டாடா கர்வ் (Tata Curvv) போன்ற கார்களுக்கும், மாருதி சுஸுகி விக்டோரிஸ் போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 3, 2025, 14:29 [IST]
English summary
Maruti suzuki victoris unveiled in india safety features engine colour options and more
மேலும்... #maruti suzuki #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+