34 கிமீ மைலேஜ் தரும் காரின் விலை தரமட்டத்துக்கு குறையுது! இவ்ளோ கம்மி ஆகும்னு கனவுல கூட நெனச்சு பாக்கல!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து, மாருதி சுஸுகி வேகன் ஆர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 25 வருடங்களாகி விட்டாலும் கூட, இன்றளவும் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

இதற்கு மைலேஜ் (Mileage) மிக முக்கியமான காரணம் ஆகும். மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் மொத்தம் 5 விதமான மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது. அதாவது இதன் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட மேனுவல் வேரியண்ட் 24.35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாகவும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் 25.19 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாகவும் உள்ளது.

Maruti Suzuki Wagon R

அதே நேரத்தில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட மேனுவல் வேரியண்ட் 23.56 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாகவும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் 24.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாகவும் உள்ளது. இவை எல்லாவற்றையும் விட 1.0 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் பொருத்தப்பட்ட மேனுவல் வேரியண்ட் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

இவை அனைத்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். அத்துடன் பாதுகாப்பிற்காக (Safety) 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகிய வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

Maruti Suzuki Wagon R Rear Design

மேலும் 17.78 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, தேவைப்பட்டால் அதிக பொருட்களை வைத்து கொள்வதற்கு ஏதுவாக 2வது வரிசை இருக்கைகளை 60:40 விகிதத்தில் மடித்து வைத்து கொள்ளும் வசதி போன்ற அம்சங்களும் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 5.79 லட்ச ரூபாயாக உள்ளது. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

ஆனால் ஜிஎஸ்டி (GST) வரி குறைப்பு காரணமாக, நாளை முதல் (செப்டம்பர் 22) மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விலை அதிரடியாக குறையவுள்ளது. காடிவாடி தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி பார்த்தால், மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை இனி 4.99 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கும்.

அதாவது மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை மட்டும் 80 ஆயிரம் ரூபாய் குறைகிறது. ஆனால் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் வேரியண்ட் வாரியான அதிகாரப்பூர்வமான புதிய விலை பட்டியல் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை. எனினும் ஆரம்ப நிலை வேரியண்ட்டை போலவே, மற்ற வேரியண்ட்களின் விலையும் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகமாக மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் வேரியண்ட் வாரியான அதிகாரப்பூர்வமான புதிய விலை பட்டியல் நமக்கு நாளை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இதை தெரிந்து கொள்ள நாம் நாளை வரை காத்திருப்பது நல்லது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 7.50 லட்ச ரூபாயாக உள்ளது. ஆனால் இந்த விலை குறையும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரை எதிர்பார்த்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி வேகன் ஆர் நல்ல ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. முதல் முறையாக கார் வாங்க கூடிய வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, September 21, 2025, 16:43 [IST]
English summary
Maruti suzuki wagon r new price after gst cut all details
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+