இந்த காரின் விலையை உயர்த்திய மாருதி! இருந்தாலும் சேல்ஸ் நிக்காம போகும் போல!

மாருதி சுஸூகி தனது பிரபலமான வேகன் ஆர் காரின் விலையை ரூ. 15,000 வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு வேகன் ஆரின் விலையை எக்ஸ்-ஷோரூம் ரூ. 5.64 லட்சத்திலிருந்து ரூ. 7.47 லட்சம் வரை மாற்றியுள்ளது. இந்த உயர்வு வேகன் ஆரை மட்டுமல்லாமல் பிரெஸ்ஸா மற்றும் புதிய டிசையர் போன்ற பிற மாடல்களையும் பாதிக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்

மாருதி சுஸூகி வேகன் ஆர் காரின் விலை உயர்வு வெவ்வேறு வேரியன்ட்களில் மாறுபடும். VXi 1.0 AGS, ZXi 1.2 AGS, ZXi+ 1.2 AGS மற்றும் ZXi+ AGS டூயல்-டோன் வேரியன்ட்கள் ரூ. 15,000 வரை அதிகரித்துள்ளன. அதேசமயம், CNG மாடல்கள் உட்பட அனைத்து மற்ற வேரியன்ட்களும் இப்போது ரூ. 10,000 விலை உயர்வு செய்யப்பட்டுள்ளன. இதனால் இனி இந்த காரை வாங்க விரும்புபவர்கள் கூடுதல் விலை கொடுத்து தான் வாங்க வேண்டியது வரும்.

Maruti Wagon R Price Hike

வேகன் ஆர் கார் இந்திய மார்கெட்டில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது: 66 bhp பவர் மற்றும் 89 Nm டார்க் திறனை உருவாக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஒரு ஆப்ஷனாகவும் மற்றும் 89 bhp பவர் மற்றும் 113 Nm டார்க் திறனை கொடுக்கும் பெரிய 1.2 லிட்டர் இன்ஜின். மற்றொரு ஆப்ஷனாக வருகிறது. கூடுதலாக, சிறிய இன்ஜின் கொண்ட சிஎன்ஜி எடிசன் கார் 56 bhp பவரை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது.

கியர்பாக்ஸ் ஆப்ஷனை பொருத்தவரை, வாடிக்கையாளர்கள்கள் மாருதி சுஸூகி வேகன் ஆர் காரில் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸை தேர்வு செய்யலாம். இந்த மாடல் ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் வாகனங்கள் மற்றும் மாரூதியின் சொந்த செலெரியோ உட்பட அதன் வரிசையில் போட்டியை எதிர்கொள்கிறது.

Maruti Wagon R Price Hike

வேகன் ஆர் மாருதி சுஸூகிக்கு விற்பனையில் தொடர்ந்து சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறது. காலம் செல்லச் செல்ல விற்பனை விலையை மாற்றி லாபத்தையும் விடாமல் விற்பனையும் குறையாமல் பராமரித்து வருகிறது. அதன் நீடித்த பிரபலம் இந்திய நுகர்வோர் மத்தியில் நம்பகமான மற்றும் குறைந்த செலவில் போக்குவரத்து ஆப்ஷன்களைத் தேடுவதற்கான அதன் ஈர்ப்பை எடுத்துக்காட்டுகிறது.

இந்தியாவில் முதன் முதலில் கார் வாங்கும் பலர் இந்த காரை தான் தேர்வு செய்கிறார்கள். இதனால் பலருக்கு இந்த கார் செண்டிமென்டான ஒரு காராக இருக்கிறது. பலர் முதல் கார் என்பதால் வேறு கார் வாங்கினாலும் இந்த காரை விற்பனை செய்யாமல் பராமரித்து வைத்திருக்கிார்கள்.

Maruti Wagon R Price Hike

இப்படியாக இந்த கார் இந்திய மார்கெட்டில் செண்டிமென்ட் நிறைந்த ஒரு காராக இருந்தாலும் குறைந்த விலை கார் என்பதாலும், நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் கார் என்பதாலும் பலர் இந்த காரை கிண்டல் செய்தும் வருகின்றனர். குறைந்த விலை தகர டப்பா என பலர் இந்த காரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் இந்த வேகன் ஆர் காரின் விற்பனையை அதிகரிக்க பல யுக்திகளை செய்துவரும் நிலையில் தற்போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளது. ஆனால் பெரிய அளவில் விலை உயர்வு இல்லாததால் இந்த காரின் விற்பனையை இது பெரிய அளவில் பாதிக்காது என எதிர்பார்க்கலாம். இந்த கார் இந்த விலை உயர்வுக்கு பிறகு இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக கூட மாற வாய்ப்புள்ளது

More from DriveSpark

Article Published On: Wednesday, February 19, 2025, 13:42 [IST]
English summary
Maruti Suzuki has raised the price of its Wagon R by up to Rs 15,000, with new costs ranging from Rs 5.64 lakh to Rs 7.47 lakh. This adjustment affects various variants and highlights the model's continued popularity in the Indian automotive market.
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X