யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல! 34 கிமீ மைலேஜ் காரை அடி மாட்டு விலையில் வித்தும் கூட சேல்ஸ் படுத்துகிச்சு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு (Hatchback Cars) எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களின் முதல் சாய்ஸ்-ஆக இருப்பது ஹேட்ச்பேக் ரக கார்கள்தான். அவற்றின் விலை குறைவு என்பதுதான் இதற்கான காரணம். அத்துடன் 5 பேர் கொண்ட குடும்பங்கள் பயணம் செய்ய ஏற்றது, சிறப்பான மைலேஜ், உருவத்தில் சிறியது என்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் சுலபமாக பயணம் செய்ய முடியும், பராமரிப்பு செலவு குறைவு போன்ற காரணங்களும் ஒருங்கிணைந்து, மிடில்க்ளாஸ் மக்களின் ஆஸ்தான வாகனமாக ஹேட்ச்பேக் ரக கார்களை மாற்றியுள்ளன.

இந்திய வாடிக்கையாளர்களை பொறுத்தவரை ஹேட்ச்பேக் ரக கார் என்றால், முதலில் நினைவிற்கு வருவது மாருதி சுஸுகி வேகன் ஆர்-ஆகதான் (Maruti Suzuki Wagon R) இருக்கும். இதனை 'டால்பாய் ஹேட்ச்பேக்' (Tallboy Hatchback) என்பார்கள். டால்பாய் ஹேட்ச்பேக் ரக கார்கள், பாக்ஸ் போன்ற டிசைனை கொண்டிருக்கும். அத்துடன் வெளிப்புறம் உயரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

Maruti Suzuki Wagon R

இதன் மூலம் காரின் உள்ளே நல்ல ஹெட்ரூம் இடவசதி இருக்கும். இன்னும் புரியும்படி சொல்வதென்றால், உயரமான நபர்கள் அமர்ந்தாலும், தலை இடிக்காது. நன்கு சௌகரியமாக பயணம் செய்யலாம். இதன் காரணமாகவே மாருதி சுஸுகி வேகன் ஆர் டால்பாய் ஹேட்ச்பேக்கை இந்திய வாடிக்கையாளர்கள் கொண்டாடி கொண்டுள்ளனர்.

வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், மாருதி சுஸுகி வேகன் ஆர் கார், ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் விதிவிலக்கு அல்ல. மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒட்டுமொத்தமாக 13,413 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது.

Maruti Suzuki Wagon R Rear Design

இதன் மூலமாக நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars) மாருதி சுஸுகி வேகன் ஆர் 9வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் இது பார்ப்பதற்கு பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கை போல் தோன்றினாலும், மாருதி சுஸுகி வேகன் ஆர் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது என்பதே உண்மை.

அதாவது மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக 17,175 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன் பின் வந்த ஏப்ரல் மாதம் 3,762 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப்போனால் நடப்பு 2025ம் ஆண்டே மாருதி சுஸுகி வேகன் ஆர் காருக்கு சரியாக அமையவில்லை.

ஏனெனில் இந்த வருடத்தின் முதல் மாதமான ஜனவரியில் 24,078 வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதன் பின் வந்த பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 19,879 ஆகவும், மார்ச் மாதம் 17,175 ஆகவும் குறைந்தது. இது அதற்கு பிறகு வந்த ஏப்ரலில் மேலும் குறைந்து 13,413 ஆக மாறியுள்ளது. எனினும் இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல மதிப்பை கொண்டுள்ள கார் என்பதால், விரைவிலேயே சரிவில் இருந்து மீளும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப விலை வெறும் 5.79 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். அத்துடன் வேகன் ஆர் காரின் சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சவாலான விலை நிர்ணயமும், சிறப்பான மைலேஜூம் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் மிகப்பெரிய பலம் என்பது எங்கள் கருத்து. எனவே மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் கூடிய விரைவிலேயே இந்த சரிவில் இருந்து மீண்டு வந்து விடும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, May 5, 2025, 22:47 [IST]
English summary
Maruti suzuki wagon r sales down in april 2025 check all details here
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+