34 கிமீ மைலேஜ் தரும் காரின் விலை தரமட்டத்துக்கு போகுது! பைக் வாங்கறதுக்கு பேசாம இதை வாங்கலாம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). இதன் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 14,552 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 16,450 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இது 12 சதவீத வீழ்ச்சி ஆகும். இருப்பினும் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars Sold In August 2025), மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் 4வது இடத்தை பிடித்துள்ளது.
முதல் 3 இடங்களில் முறையே மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga), மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) ஆகிய கார்கள் பிடித்துள்ளன. இந்த வரிசையில் 4வது இடம் பிடித்துள்ள மாருதி சுஸுகி வேகன் ஆர், இந்திய சந்தையில் ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய கார்களில் ஒன்றாகும்.

கடந்த 1999ம் ஆண்டில் இருந்து விற்பனையில் இருந்து வரும் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் தற்போதைய விலை 5.78 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 7.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
ஆனால் ஜிஎஸ்டி (GST) வரி குறைப்பால், மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விலை, வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு பிறகு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதாவது மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் புதிய விலை சுமார் 5.28 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம்.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் டாப் வேரியண்ட்டின் புதிய விலை சுமார் 6.85 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இவை அனைத்துமே மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் எதிர்பார்க்கப்படும் புதிய எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். எனவே இந்த காரின் வேரியண்ட் வாரியான புதிய விலை பட்டியலை மாருதி சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை காத்திருப்பது நல்லது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி வேகன் ஆர் நல்ல ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் போன்ற வசதிகள் எல்லாம் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த ஒரு தயாரிப்பாக மாருதி சுஸுகி வேகன் ஆர் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








