அடி மாட்டு விலையில் விற்கப்படும் 34 கிமீ மைலேஜ் கார்! சந்தைல காய்கறி வாங்கற மாதிரி போய் வாங்கீட்டு இருக்காங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) காரின் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19,879 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19,412 ஆக மட்டுமே இருந்தது. இது 2 சதவீத வளர்ச்சி ஆகும்.
இதன் மூலம் இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் (Top-10 Cars) பட்டியலில், மாருதி சுஸுகி வேகன் ஆர், 2வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் இருப்பது மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) ஆகும்.

இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ள மாருதி சுஸுகி வேகன் ஆர், ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்று. இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்த 1999ம் ஆண்டில் இருந்து மாருதி சுஸுகி வேகன் ஆர் விற்பனையில் இருந்து வருகிறது.
இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும், வாடிக்கையாளர்கள் விரும்பும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி வேகன் ஆர் திகழ்கிறது. இதற்கு முதல் காரணம் அதன் விலைதான். தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் (LXI) விலை 5.64 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் (ZXI+ AGS) விலையும் கூட 7.35 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். எனவேதான் அதன் விற்பனை தொடர்ந்து சிறப்பாக இருந்து கொண்டுள்ளது.
மாருதி சுஸுகி வேகன் ஆர் விலை குறைவானது என்பதுடன், நல்ல மைலேஜ் வழங்க கூடியது என்பது கூடுதல் சிறப்பு. இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. மறுபக்கம் பெட்ரோல் வேரியண்ட்களும் கூட நல்ல மைலேஜை (Mileage) வழங்குகின்றன.
அதாவது மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் பெட்ரோல்-மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.35 கிலோ மீட்டர் மைலேஜையும், பெட்ரோல்-ஏஜிஎஸ் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 25.19 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்குகின்றன. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மைலேஜ் ஆகும்.
அத்துடன் இவை 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்களின் மைலேஜ் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதுதவிர மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதன் மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 23.56 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் இதன் ஏஜிஎஸ் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் சிஎன்ஜி வேரியண்ட்களில் 1.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்பதும், இதில் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது என்பதும், ஏஜிஎஸ் கிடையாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஏஜிஎஸ் என்பது மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆகும். Auto Gear Shift என்பதன் சுருக்கம்தான் AGS. இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் சிட்ரோன் சி3 (Citroen C3) உள்ளிட்ட கார்களுக்கு எல்லாம் மாருதி சுஸுகி வேகன் ஆர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி வேகன் ஆர், இந்தியாவின் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு ஏற்றது. ஓரளவிற்கு குறைவான விலையில், அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு ஹேட்ச்பேக் ரக காரை வாங்கலாம் என முடிவு செய்துள்ள நபர்கள், மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








