34 கிமீ மைலேஜ் காரை இந்த விலையில் வித்தா கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது! ஷோரூமுக்கு படையெடுக்கும் மக்கள்!

2025ம் ஆண்டு புத்தாண்டை நேற்றுதான் கொண்டாடியது போல் உள்ளது. ஆனால் அதற்குள்ளாக 6 மாதங்கள் முழுமையாக கடந்து விட்டன. இந்த நேரத்தில் 2025ம் ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி-ஜூன்), இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியல் (Top 10 Cars H1 2025) வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டின் முதல் பாதியில் ஒட்டுமொத்தமாக 1,01,424 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டின் முதல் பாதியில் ஒட்டுமொத்தமாக 99,668 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Maruti Suzuki Wagon R Side View

இது 2 சதவீத வளர்ச்சி ஆகும். 2025ம் ஆண்டின் 2வது பாதியிலும் (ஜூலை-டிசம்பர்) மாருதி சுஸுகி வேகன் ஆர், விற்பனையில் இந்த உத்வேகத்தை தொடர்ந்தால், நடப்பு 2025ம் ஆண்டில் மிகவும் அதிகமாக விற்பனையான கார் என்ற பெருமையை பெறலாம். ஆனால் இந்த பெருமையை பெற ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) போன்ற கார்களும், மிக கடுமையான போட்டியை வெளிப்படுத்தி கொண்டுள்ளன.

நடப்பு 2025ம் ஆண்டின் முதல் பாதியில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் ஹூண்டாய் க்ரெட்டா 2வது இடத்தை பிடித்துள்ளது. 1,00,560 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதன் மூலம், ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு 2வது இடம் கிடைத்துள்ளது. மாருதி சுஸுகி வேகன் ஆர் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய கார்களுக்கு இடையேயான வித்தியாசம் வெறும் 864 யூனிட்கள் மட்டுமே.

Maruti Suzuki Wagon R

எனவே நடப்பு 2025 காலண்டர் ஆண்டில் மிகவும் அதிகமாக விற்பனையான கார் என்ற மகுடத்தை சூட மிகவும் கடுமையான போட்டி ஏற்படலாம். இந்த மகுடத்தை சூடப்போகும் கார் எது? என்பது 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் நமக்கு தெரிய வரும். தற்போதைய நிலையில் இந்த பந்தயத்தில் முந்தி சென்று கொண்டுள்ள மாருதி சுஸுகி வேகன் ஆர் கார், ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்தது ஆகும்.

இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.78 லட்ச ரூபாய் மட்டுமே. டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 7.49 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இது விலை குறைவானது என்பதுடன், அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாகவும் உள்ளது.

மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன. மறுபக்கம் இந்த காரின் 1.0 லிட்டர் பெட்ரோல்/ஏஜிஎஸ் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 25.19 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன.

அதே நேரத்தில் 1.0 லிட்டர் சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. இதுதவிர மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதன் மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 23.56 கிலோ மீட்டர் மைலேஜையும், ஏஜிஎஸ் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.43 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்குகின்றன.

இந்த விலை மற்றும் மைலேஜ், மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை ஆகும். மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் நீளம் 3,655 மிமீ ஆகும். அதே நேரத்தில் அகலம் 1,620 மிமீ ஆகவும், உயரம் 1,675 மிமீ ஆகவும் உள்ளது. ஆக மொத்தத்தில் 5 பேர் சௌகரியமாக பயணம் செய்யும் வகையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. மேலும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், இபிடி உடன் ஏபிஎஸ் ஆகிய வசதிகளும் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் 17.78 செமீ ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ரிமோட் கீலெஸ் எண்ட்ரி ஆகிய வசதிகளையும் மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் கொண்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இது கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி வேகன் ஆர் கார், கடந்த 1999ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 26 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்னமும், இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இதற்கு சரியான விலை நிர்ணயம், மைலேஜ், வசதிகள் மற்றும் மாருதி சுஸுகி நிறுவனம் பிரம்மாண்டமான சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவைதான் முக்கியமான காரணங்கள் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, July 18, 2025, 18:11 [IST]
English summary
Maruti suzuki wagon r sales report h1 2025 2 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+