34 கிமீ மைலேஜ்! வெறும் 5 லட்ச ரூபா ரேஞ்சுல புது கார்! பஸ்ல கூட்டத்துல நசுங்கீட்டு போறதுக்கு பேசாம இத வாங்கலாம்
இந்திய சந்தையில் கடந்த 1999ம் ஆண்டில் இருந்து விற்பனையில் இருந்து வரும் ஒரு கார் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட தற்போதும் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை ஒவ்வொரு மாதமும் சிறப்பாக இருந்து வருகிறது.
நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் ஒட்டுமொத்தமாக 14,710 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலையில் அதிகமாக விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Bestselling Cars In July 2025), மாருதி சுஸுகி வேகன் ஆர் 4வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) ஆகியவை உள்ளன.
அதே நேரத்தில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் (Top 10 Bestselling Hatchback Cars In July 2025), மாருதி சுஸுகி வேகன் ஆர் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் இந்த சிறப்பான விற்பனைக்கு முதல் காரணம் அதன் விலைதான்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.79 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 7.50 ரூபாய் மட்டும்தான். இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில், 5 பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும். அத்துடன் இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் பாதுகாப்பிற்காக ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர 17.78 செமீ ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 4 ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட வசதிகளும், மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் வழங்கப்படுகின்றன. இந்த வசதிகள் எல்லாம் வேரியண்ட்களை பொறுத்து மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் இன்ஜின் ஆப்ஷன்களிலேயே சிஎன்ஜி இன்ஜின் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மைலேஜ் ஆகும். இருப்பினும் கிட்டத்தட்ட இதே அளவு மைலேஜ் கிடைப்பதாக, அதன் உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் 5 பேர் சௌகரியமாக பயணம் செய்ய கூடிய, அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி வேகன் ஆர் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








