தரமட்ட ரேட்டில் விற்பனை செய்யப்படும் 34 கிமீ மைலேஜ் கார்! கஸ்டமர்களை வலை வீசி தேடிகிட்டு இருக்காங்க!

இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் ரக கார்களை வாங்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு முதன்மையான ஆப்ஷன்களில் ஒன்றாக இருப்பது மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). இதன் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் 13,949 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 14,492 ஆக இருந்தது. இது 4 சதவீத வீழ்ச்சி ஆகும்.

Maruti Wagon R

இதன் காரணமாக நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars May 2025), மாருதி சுஸுகி வேகன் ஆர் காருக்கு 7வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மாருதி சுஸுகி டிசையர் ஆகும்.

இதற்கு அடுத்த இடங்களில் முறையே மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் க்ரெட்டா, மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகிய கார்கள் உள்ளன. இந்த வரிசையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காருக்கு 7வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

Maruti Wagon R Front

ஆனால் இந்த சரிவு தற்காலிகமானதாக மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். கூடிய விரைவில், அனேகமாக நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திலேயே இந்த சரிவில் இருந்து மாருதி சுஸுகி வேகன் ஆர் மீண்டு வந்து விடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.

ஏனெனில் இது குறைவான விலையில் (Price) கிடைக்க கூடிய, அதே நேரத்தில் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார்களில் ஒன்றாகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் வெறும் 5.78 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையிலேயே கிடைக்கிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

அதே நேரத்தில் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி வேகன் ஆர் நல்ல ஆப்ஷன்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் (Tata Punch), டாடா டியாகோ (Tata Tiago) போன்ற கார்களுக்கு எல்லாம் மாருதி சுஸுகி வேகன் ஆர் நல்ல ஆப்ஷன். அதேபோல் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காருக்கு மாற்றாக ஒரு ஹேட்ச்பேக் காரை பரிசீலனை செய்ய கூடிய வாடிக்கையாளர்களுக்கும் கூட, மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Swift) ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 9, 2025, 23:57 [IST]
English summary
Maruti suzuki wagon r sales report may 2025 4 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+