சான்ட்ரோவை காலி பண்ணிய கார் இதுதான்! 34 கிமீ மைலேஜ் குடுக்குது! ஆனா விலை 5 லட்ச ரூபா கூட இல்ல!

இந்தியாவில் ஹூண்டாய் சான்ட்ரோ (Hyundai Santro) கார், கடந்த 1998ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு போட்டியாக கடந்த 1999ம் ஆண்டில், மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. குறைவான விலை, சிறப்பான மைலேஜ் மற்றும் தாராளமான இடவசதி போன்ற காரணங்களால், மாருதி சுஸுகி வேகன் ஆர் கார், இந்திய மக்களின் இதயங்களை கொள்ளையடித்தது.

இந்திய சந்தையில் தற்போது ஹூண்டாய் சான்ட்ரோ விற்பனையிலேயே இல்லை. ஆனால் அதற்கு போட்டியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுஸுகி வேகன் ஆர், சுமார் 26 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்னமும் இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் அதிகமாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது.

Maruti Suzuki Wagon R Interior

இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 14,619 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், 13,982 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 637 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Maruti Suzuki Wagon R

இதன் மூலம் மாருதி சுஸுகி வேகன் ஆர் கார், விற்பனையில் 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars November 2025), மாருதி சுஸுகி வேகன் ஆர், 9வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 8 இடங்களில் முறையே, டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி டிசையர், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், டாடா பன்ச், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி எர்டிகா, மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஆகிய கார்கள் உள்ளன. இந்த வரிசையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் 9வது இடத்தை பிடித்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 6.95 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

அதே நேரத்தில் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். இதுதவிர மாருதி சுஸுகி வேகன் ஆர் கார், பயணிகளுக்கு தாராளமான இடவசதியையும் வழங்குகிறது. குறிப்பாக உயரம் அதிகமாக உள்ளவர்கள் கூட, மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில், சௌகரியமாக பயணம் செய்ய முடியும்.

மேலும் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் லக்கேஜ்களை கொண்டு செல்ல வசதியாக 341 லிட்டர் பூட் ஸ்பேஸ் (Boot Space) வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை, இந்திய சந்தையில் மிகவும் வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக மாற்றியுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி வேகன் ஆர் மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) போன்ற பிரபலமான மனிதர்கள் கூட, கடந்த காலங்களில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை பயன்படுத்தி வந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 10, 2025, 18:20 [IST]
English summary
Maruti suzuki wagon r sales report november 2025 5 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+