விலை 5 லட்சம் கூட இல்ல! 34 கிமீ மைலேஜ் குடுக்கும் காரை வாங்க கூட்டம் அலை மோதிகிட்டு இருக்கு! டாடா பாவம்யா!

கார்களில் நல்ல ஹெட்ரூம் (Headroom) இருப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் அதிக உயரம் கொண்டவர்களாலும் கூட, சௌகரியமாக பயணம் செய்ய முடியும். இந்தியாவை பொறுத்தவரை, ஓரளவிற்கு குறைவான விலையில், அதே நேரத்தில் நல்ல ஹெட்ரூம் கொண்ட கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) காரை குறிப்பிடலாம்.

மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் பின் இருக்கைகளில், 6 அடிக்கும் அதிகமான உயரம் கொண்டவர்களால் கூட, சௌகரியமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும். இதற்கு மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் டால்பாய் டிசைன்தான் மிகவும் முக்கியமான காரணம். ஆனால் மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் சௌகரியமான பயணத்திற்கு மட்டும் பிரபலமானது அல்ல.

Maruti Suzuki Wagon R Interior

கூடவே குறைவான விலை மற்றும் நிறைவான மைலேஜ் ஆகிய காரணங்களுக்காவும் கூட, மாருதி சுஸுகி வேகன் ஆர் மிகவும் பிரபலமானதாக திகழ்கிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 6.95 லட்ச ரூபாயாக மட்டும்தான் இருக்கிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

Maruti Suzuki Wagon R

மறுபக்கம் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.

இது போன்ற சிறப்பம்சங்கள் உடன் 341 லிட்டர் பூட்ஸ்பேஸ், 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களும் ஒருங்கிணைந்து, மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை, இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பமான கார்களில் ஒன்றாக மாற்றியுள்ளன.

இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதமும் விதிவிலக்கு அல்ல. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், மாருதி சுஸுகி நிறுவனம் 18,970 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெறும் 13,922 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் விற்பனையில் 36 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars October), மாருதி சுஸுகி வேகன் ஆர், 4வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி டிசையர் மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா ஆகிய கார்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி வேகன் ஆர் மிகச்சிறந்த ஆப்ஷன் ஆகும். டாடா டியாகோ போன்ற கார்களுக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாகவும், மாருதி சுஸுகி வேகன் ஆர் திகழ்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, November 10, 2025, 16:39 [IST]
English summary
Maruti suzuki wagon r sales report october 2025 36 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+