34 கிமீ மைலேஜ் கார இந்த ரேட்ல விக்கறாங்களா! விஜய்யை பாக்க வர்ற கூட்டத்தை விட ஷோரூம்ல பயங்கர கூட்டம்!
மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) காரின் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 15,388 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 13,359 ஆக மட்டுமே இருந்தது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 2,029 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 15 சதவீத வளர்ச்சி ஆகும்.

இதன் காரணமாக நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars September 2025), மாருதி சுஸுகி வேகன் ஆர், 7வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 6 இடங்களில் முறையே டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி டிசையர், ஹூண்டாய் க்ரெட்டா, மஹிந்திரா ஸ்கார்பியோ, டாடா பன்ச் மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகிய கார்கள் உள்ளன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 6.84 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 1.0 லிட்டர் கே10சி பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் கே12என் பெட்ரோல் ஆகியவை ஆகும். இதில், 1.0 லிட்டர் இன்ஜின் உடன் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இருப்பதிலேயே இதுதான் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியது ஆகும்.
ஆம், மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விசாலமான மற்றும் சௌகரியமான கேபினுக்கு மாருதி சுஸுகி வேகன் ஆர் புகழ்பெற்றது. எனவே குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய இந்தியாவின் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு, மாருதி சுஸுகி வேகன் ஆர் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago), மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) மற்றும் மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மாருதி சுஸுகி வேகன் ஆர் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








