கிண்டல் செஞ்சவங்களின் முகத்தில் கரியை பூசிய மாருதி... இனி பாதுகாப்புல டாடாவுக்கே டஃப் குடுக்க போறாங்க...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6). முன்பு இந்த காரின் குறிப்பிட்ட ஒரு சில டாப் வேரியண்ட்களில் (Variants) மட்டும்தான், 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனி மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படும்.

எக்ஸ்எல்6 காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படும் என மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. பாதுகாப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அப்டேட் காரணமாக மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் விலை 0.8 சதவீதம் வரை உயரவுள்ளது. ஆனால் வேரியண்ட்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடலாம். இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

Maruti Suzuki XL6 Front Profile

தற்போதைய நிலையில் 6 சீட்டர் ஆப்ஷனில், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் 2வது வரிசையில் கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் ரியர் ஏசி வெண்ட்கள் என ஏராளமான வசதிகளையும் (Features) மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கொண்டுள்ளது.

செயல்திறனை பொறுத்தவரையில், மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர 1.5 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரில் உண்டு.

Maruti Suzuki XL6

இதன் உடன் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்களின் மைலேஜ் (Mileage) ஒரு லிட்டருக்கு 20.97 கிலோ மீட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 20.27 கிலோ மீட்டர்களாக இருக்கிறது.

மறுபக்கம் சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்டின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 26.32 கிலோ மீட்டர்களாக உள்ளது. அதாவது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஏற்கனவே மைலேஜ் மற்றும் வசதிகள் போன்ற அம்சங்களில் சிறப்பான ஒரு காராகதான் இருந்து வந்தது. தற்போது ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வசதி மூலமாக அதன் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார், பிரீமியமானது என்பதால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுவதால், இனி மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் பாதுகாப்பு அதிகரிக்கும். இதன் காரணமாக இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

முன்னதாக பாதுகாப்பு விஷயத்தில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள், வாடிக்கையாளர்களால் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தன. எனவே மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் தனது கார்கள் அனைத்திலும், ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு கார்களில் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படும் நிலையில், தற்போது எக்ஸ்எல்6 காரில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் காலங்களில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள், பாதுகாப்பில் தலைசிறந்து விளங்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 24, 2025, 14:03 [IST]
English summary
Maruti suzuki xl6 mpv gets 6 airbags as standard check all details here
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+