27 கிமீ மைலேஜ் குடுக்கற இந்த கார்ல இத்தன பேர் போக முடியுமா! விலை நம்மள இன்னும் ஆச்சரியப்படுத்துது!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பிரீமியம் எம்பிவி ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6). இது பிரீமியம் கார் என்பதால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் வழக்கமான அரேனா (Arena) ஷோரூம்கள் வாயிலாக இல்லாமல், நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார் விற்பனையில் 1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஏனெனில் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 4,363 எக்ஸ்எல்6 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 4,403 ஆக உயர்ந்துள்ளது. இது 1 சதவீத வளர்ச்சி ஆகும்.

Maruti Suzuki XL6 Ventilated Seat

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 11.71 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 14.71 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரில் பொருத்தப்பட்டிருப்பது, மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஎஸ் பவர் மற்றும் 137 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

Maruti Suzuki XL6

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு முறையே 20.97 கிலோ மீட்டர் ஆகவும், 20.27 கிலோ மீட்டர் ஆகவும் உள்ளது. மறுபக்கம் சிஎன்ஜி வேரியண்ட்டிலும் இதே 1.5 லிட்டர் இன்ஜின்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது, 88 பிஎஸ் பவர் மற்றும் 121.5 என்எம் டார்க் திறனை மட்டுமே நீங்கள் அதிகபட்சமாக பெற முடியும். அதேபோல் சிஎன்ஜி வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கிடையாது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

எனினும் பெட்ரோல் வேரியண்ட்களை விட, சிஎன்ஜி வேரியண்ட்கள் நல்ல மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. அதாவது ஒரு கிலோவிற்கு 26.32 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும். இது எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் என்பதால், 6 பேர் பயணம் செய்ய முடியும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நல்ல மைலேஜ் உடன், அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு பிரீமியம் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஏற்றது. இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் (Kia Carens) காருக்கு இது மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 26, 2025, 22:05 [IST]
English summary
Maruti suzuki xl6 sales report january 2025 1 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+