ரூ1.89 லட்சம் கம்மி விலையில் ஸ்விஃப்ட் கார்! ராணுவ கேண்டீன் விலை இவ்வளவு தானா?

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு வாகனங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் விற்பனை அதிகரித்துள்ளது.இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமல்ல ராணுவ கேண்டீன்களில் விற்பனையாகும் கார்களின் விலையையும் குறைத்துள்ளது. இதில் மாருதி ஸ்விஃப்ட் காரின் ராணுவ விலை குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ராணுவ கேண்டீன்களில் விற்பனையாகும் கார்களுக்கு வெளியில் விற்பனையாகும் கார்களுக்கு விதிக்கப்படும் வரியில் பாதி தான் இதற்கு விதிக்கப்படுகிறது. அதாவது 28 சதவீதம் வரி என்றால் ராணுவ கேண்டீனில் வாங்கும் கார்களுக்கு 14 சதவீதம் மட்டுமே வரியாக விதிக்கப்படுகிறது. இதன்படி பார்த்தால் ராணுவ கேண்டீனில் விற்பனையாகும் மாருதி ஸ்விஃப்ட் காருக்கு ரூ5.07 லட்சம் முதல் ரூ6.49 லட்சம் வரையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ரூ1.89 லட்சம் வரை மிச்சம் செய்ய முடியும். இனி வேரியன்ட் வாரியிலான விலை விபரங்களை பார்ப்போம்.

Maruti Swift CSD Prices

மாருதி ஸ்விஃப்ட் எல்எக்ஸ்ஐ வேரியன்ட் ரூ6.49 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது ராணுவ கேண்டீனில் ரூ5.07 லட்சம் தான். இதன் வித்தியாசம் ரூ1.42 லட்சம் ஆகும். ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ வேரயின்டை பொருத்தவரை ரூ7.29 லட்சம் என்ற விலையில் எக்ஸ்ஷோரூமிலும், ரூ5.74 லட்சம் என்ற விலையில் ராணுவ கேண்டீனிலும் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூ1.55 லட்சம் ஆகும்.

மாருதி ஸ்விஃப்ட் இசட் எக்ஸ்ஐ வேரியன்டை பொருத்தவரை ரூ8.29 லட்சம் என்ற விலையில் எக்ஸ் ஷோரூமிலும், ரூ6.61 லட்சம் என்ற விலையில் ராணுவ கேண்டீலும் விற்பவனையாகி வருகிறது. இதன் வித்தியாசம் ரூ1.68 லட்சம் ஆகும். இசட் எக்ஸ்ஐ பிளஸ் வேரியன்டை பொருத்தவரை ரூ8.99 லட்சம் என்ற விலையில் எக்ஸ்ஷோரூமிலும், ரூ7.23 லட்சம் என்ற விலையில் ராணுவ கேண்டீனிலும் விற்பனையாகி வருகிறது. இதன் வித்தியாசம் ரூ1.76 லட்சம் ஆகும்.

Maruti Swift CSD Prices

மாருதி ஸ்விஃப்ட் விஎக்ஸ்ஐ ஏஎம்டி காரை பொருத்தவரை ரூ7.79 லட்சம் எக்ஸ் ஷோரூமிலும், ரூ6.12 லட்சம் ராணுவ கேண்டீனிலும் விற்பனையாகி வருகிறது. இதன் வித்தியாசம் ரூ1.67 லட்சம் ஆகும். மாருதி ஸ்விஃப்ட் இசட் எக்ஸ்ஐ ஏஎம்டி வேரியன்டை பொருத்தவரை ரூ8.79 லட்சம் எக்ஸ் ஷோரூமிலும், ரூ6.98 லட்சம் ராணுவ கேண்டீனிலும் விற்பனையாகி வருகிறது. இதன் வித்தியாசம் ரூ1.81 லட்சம். இசட் எக்ஸ்ஐ+ ஏஎம்டி வெர்ஷனை பொருத்தவரை ரூ9.49 லட்சம் எக்ஸ்ஷோரூமிலும், ரூ7.60 லட்சம் ராணுவ கேண்டீனிலும் விற்பனையாகி வருகிறது. இதன் வித்தியாசம் ரூ1.89 லட்சம் ஆகும். ஆக இந்த காரை ராணுவ கேண்டீனில் வாங்கினால் ரூ1.89 லட்சம் வரை அதிகபட்சம் மிச்சம் செய்யலாம்.

மாருதி ஸ்விஃப்ட் காரை பொருத்தவரை இசட் சிரீஸ்இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளுது. இதில் 1.2லி இசட்12இ 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளுது. இது 80 பிஎச்பி பவரையம், 112 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளுது. இந்த இன்ஜினி் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் லிட்டருக்கு மேனுவல் கியர் பாக்ஸில் 24.80 கி.மீ மைலேஜையும், ஆட்டோமெட்டிக் வேரியன்டில் ரூ25.75 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது.

Maruti Swift CSD Prices

இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பாக உள்ளது. முக்கியமாக ஹில் ஹோல்டு கண்ட்ரோல், இஎஸ்பி, புதிய சஸ்பென்சன் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், க்ரூஸ் கண்ட்ரோல், 3 பாயிண்ட் சீட் பெல்ட், பிரேக் அசிஸ்ட், புதிய எல்இடி ஃபாக் லைட்டுகள், வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராணுவ கேண்டீன்கள் மூலம் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் பொருட்களை வாங்க முடியும். அவர்களுக்கு குறைவான விலையில் பொரட்கள் கிடைக்கும். கார் உள்ளிட்டவற்றை வாங்க சில கட்டுபாடுகள் உள்ளது. இப்படியாக வாங்கப்படும் கார்களை வெளியில் உடனடியாக விற்கவும் முடியாது. இது ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் பயன்படுத்த மட்டுமே விற்பனை செய்யப்படும் வாகனம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 21, 2025, 12:20 [IST]
English summary
Maruti swift csd prices december 2025
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X