வெறும் ரூ7.793 தான் இஎம்ஐ, இந்த காரை இவ்வளவு கம்மி விலையில் வாங்கலாமா?
இந்தியாவில் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபிறகு வாகனங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. தற்போது பலர் வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு கடன் மூலம் வாகனம் வாங்குபவர்கள் எவ்வளவு பணம் முன்பணமாக செலுத்த வேண்டும்? எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை இங்கே காணப்போகிறோம்.
இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்கள் பலர் ஸ்விஃப்ட் காரை வாங்கும் மன நிலையில் இருப்பார்கள். மாருதி நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகும் காராக இது இருக்கிறது. இந்தியாவில் நம்பர் 1 காராக இந்த கார் விற்பனையாகி வருகிறது. ஜிஎஸ்டி குறைப்பிற்கு பிறகு ரூ6.49 லட்சத்திற்கு விற்பனையாகி வந்த இதன் பேஸ் வேரியன்ட் தற்போது ரூ5.78 லட்சத்திற்கு குறைந்துள்ளது. இதன் மூலம் இந்த காரின் விலை ரூ70,100 வரை குறைந்துள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் காரை பொருத்தவரை எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ (ஓ), இசட் எக்ஸ்ஐ, இசட் எக்ஸ்ஐ பிளஸ் ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் நாம் பேஸ் வேரியன்டான எல்எக்ஸ்ஐ வேரியன்டை வைத்து பார்ப்போம். இதில் ரூ5 லட்சத்தை கடனாக பெற்றால் நீங்கள் எவ்வளவு இஎம்ஐ, எவ்வளவு முன்பணம் செலுத்த வேண்டும் என்ற விபரங்களை காணலாம்.
நீங்கள் ரூ5 லட்சத்திற்கு லோன் வாங்கி பாக்கி பணத்தை முன்பணமாக செலுத்த வேண்டும். அதாவது ரூ79 ஆயிரம் முன்பணமாக செலுத்த வேண்டும். இப்படி செலுத்தினால் பாக்கியுள்ள ரூ5 லட்சத்தை 3 முதல் 7 ஆண்டு வரை இஎம்ஐ செலுத்தும் ஆப்ஷனில் காரை வாங்க முடியும். அப்படி என்றால் 3 ஆண்டுகளுக்கான ஆப்ஷனில் மாதம் ரூ15,668, 4 ஆண்டு ஆப்ஷனில் மாதம் ரூ12,206, 5 ஆண்டு ஆப்ஷனில் ரூ10,138, 6 ஆண்டு ஆப்ஷனில் ரூ8,767, 7 ஆண்டு ஆப்ஷனில் ரூ7,793 இஎம்ஐயாக செலுத்த வேண்டும். இது 8 சதவீத வட்டிக்கான கணக்கீடு தான்.

இதுவே நீங்கள் வாங்கும் கடன் 8.5 சதவீத வட்டி விகிதமாக இருந்தால் உங்களுக்கு 3 ஆண்டு ஆப்ஷனில் ரூ15,784, 4 ஆண்டு ஆப்ஷனில் ரூ12,324, 5 ஆண்டு ஆப்ஷனில் ரூ10,258,6 ஆண்டு ஆப்ஷனில் ரூ8,889, 7 ஆண்டு ஆப்ஷனில் ரூ7918 என இஎம்ஐ செலுத்த வேண்டும்.
இது வே நீங்கள் 9 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வாங்கினால் நீங்கள் 3 ஆண்டு ஆப்ஷனில் ரூ15,900, 4 ஆண்டு ஆப்ஷனில் ரூ12,443, 5 ஆண்டு ஆப்ஷனில் ரூ10,379, 6 ஆண்டு ஆப்ஷனில் ரூ9,013,7 ஆண்டு ஆப்ஷனில் ரூ8045 இஎம்ஐ செலுத்த வேண்டும்.

இதுவே நீங்கள் 9.5 சதவீத வட்டி வகிதத்தில் வாங்கினால் நீங்கள் 3 ஆண்டுகளுக்கு ரூ16,016, 4 ஆண்டுகளுக்கு ரூ12,562, 5 ஆண்டு களுக்கு ரூ10,501, 6 ஆண்டுகளுக்கு ரூ9137, 7 ஆண்டுகளுக்கு ரூ8172 இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.
நீங்கள் 10 சதவீத வட்டி வகித்தில் கடன் வாங்கினால் 3 ஆண்டுகளுக்க ரூ16,134, 4 ஆண்டுகளுக்கு ரூ12,681, 5 ஆண்டுகளுக்கு ரூ10,624, 6 ஆண்டுகளுக்கு ரூ9263, 7 ஆண்டுகளுக்கு ரூ8301 இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.
மாருதி ஸ்விஃப்ட் காரின் இன்ஜினை பொருத்தவரை புதிய இசட் சிரீஸ் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 1.2லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜினாக வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 80 பிஎச்பி பவரையும், 112 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் மேனுவலில் 24.8 கி.மீ மைலேஜையும், ஆட்டோமெட்டிக்கில் 25.75 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதில் வட்டி வகிதங்கள் நீங்கள் கடன் வாங்கும் நிறுவனம் மற்றும் உங்கள் சிபிள் ஸ்கோரை பொருத்து மாறுபடும். இது போக முன்பணமும் எக்ஸ் ஷோரூம் விலையை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இது போக ஆர்டிஓ கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணம், எல்லாம் தனியாக வரும் அதை நீங்கள் கணக்கிட்டு கொள்ள வேண்டும். முழுமையாக சரியான விபரங்களை அருகில் உள்ள ஷோரூமில் சென்று செக்செய்து கொள்ளுங்கள். இந்த விலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









